Sunday 31 March 2013

மரியாதைக்குரிய முன்னாள் மத்திய அமைச்சர் தாயாநிதி மாறன் அவர்களுக்கு,




வணக்கம் மாநில சுயாட்சி என்று தமிழர்-தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கும் வகையில் மாநில சுயாட்சி என்பதற்கு தெளிவான கருத்தியலை வழங்கிய முரசொலி மாறனன் அவர்களின் மைந்தன் என்ற முறையிலும், இன்று மாணவர்களிடையே எழுச்சியை தொடங்கி வைத்திருக்கும் லயோலா கல்லூரின் முன்னாள் மாணவர் நீங்கள் என்ற உரிமையிலும், இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகின்றோம்.
தங்கள் தந்தையின் எதிர்பாராத மரணத்திற்கு பிறகு தாங்களும், தங்கள் சகோதரர் கலாநிதி மாறனும், அரசியலிலும், தொழில் துறையிலும் பிரகாசித்து வருகிறீர்கள். அரசியல் அல்லது தொழில் என்று வந்து விட்டால் பங்காளிகள் எதிரிகள் ஆகிவிடுவார்கள் என்பதனை பொய்யாகும் விதத்தில் மற்றவர்களுக்கு முன்னோடியாக இருந்து வருகிறீர்கள் என்பதை நீங்கள் இருவரும் நிகழ்வுகளில் ஒன்றாக கலந்து கொள்வதை பார்த்து பெருமையடைந்திருக்கின்றோம். நீங்கள் இருவரும் சென்னை போட் கிளப் சாலையில் ஒன்றாக வசிக்கீறீர்கள்.
     தாங்கள் மத்திய சென்னை தொகுதியில் முதன் முறையாக 2004 ம் ஆண்டு 1,34,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மத்திய மந்திரி பதவியில்  அமர்ந்தீர்கள், ஆனால் உங்கள் குடும்ப நிறுவனமான சன் டிவி-தினகரன் அலுவலக தாக்குதலில் மூன்று உயிர்கள் பலியானதால் திமுக தலைமை மீது முரண்பட்டு தங்கள் பதவியை விட்டு விலகினீர்கள்.
அதன் பிறகு 2009ம் ஆண்டு நடந்த மத்திய சென்னை தொகுதியில் கடும் போட்டிக்கிடையே 33,454 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றீர்கள்.  
தமிழகத்தில் எழுந்த மாணாவர் எழுச்சிக்கு பிறகு, தாங்கள் சார்ந்திருக்கும் திமுக கட்சி மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு ஈழத்தமிழர் பிரச்சணையில் துரோகம் செய்து விட்டது என்று ஆதரவை விலக்கி கொண்டது.
இலங்கை கிரிக்கெட் அணி நம் நாட்டில் விளையாடுவதை எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதனை மேல்நாட்டவர் அவதானிக்கும் போது அவர்கள் நம்மை தவறாக மதிப்பிடக்கூடிய சூழ்நிலைகளும் உள்ளன. இதன் மூலம் மேல் நாட்டவர், வட இந்திய மக்கள் நாம் இந்த அணிக்கு கொடுக்கும் ஆதரவை எப்படி நோக்குவார்கள் என்பதனையும், சிங்களவர் எப்படி கிரிக்கெட் மூலம் இனப்படுகொலையை மறைக்கலாம் என்று சிந்திக்கிறார்கள் என்பது பற்றியும் நாம் கவனித்தாக வேண்டும்.
இன்று இலங்கையின் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான அழுத்தம் உலக அளவில் எழுந்து வருகிறது, இதற்காக தமிழகத்திலும், புலம் பெயர் அமைப்புகளும் போராடி வருகின்றனர். தமிழக மாணவர் சமூகம் போர்க்கோலம் பூண்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் தமிழர்களின் முயற்சிகளை பலவீனப்படுத்துவதற்காகவே இலங்கை அரசு விளையாட்டு என்ற பெயரில் தனது பிரச்சாரத்தை செய்ய முயல்கின்றது. தமிழகம் தவிர்த்த மற்ற மாநிலங்களுக்கு இலங்கை என்றாலே கிரிக்கெட் தான் நினைவுக்கு வருகிறது. ஆக இனப்படுகொலை புரிந்த இலங்கை என்பதை அவர்களுக்கு நாம் எப்படி அறிவிக்கப் போகிறோம்?  இலங்கைக் கிரிக்கெட்டை இங்கே நாம் தடை செய்வதே அதை நோக்கிய  சிறந்த நகர்வாக இருக்கும்.அப்படிப்பட்ட தடை விதிக்கப்படுமானால் இலங்கையின் இனவெறி முகம் அனைவருக்கும் தெள்ளத் தெளிவாகத் தெரியவரும் என்பது உறுதி.

1974 ஆம் ஆண்டு அமிர்தராஜ் சகோதரர்கள் தலைமையிலான இந்திய அணி முதன் முறையாக டேவிஸ் கோப்பை டென்னிஸ் இறுதி போட்டியில் கோப்பை வெல்ல வாய்ப்பு இருந்தும், தென்னாப்பிக்காவின் இனவெறியை கண்டித்து அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி இந்திய அணியை போட்டியிலிருந்து விலக செய்து இனவெறிக்கு எதிரான தனது போராட்ட்த்தினை வெளிக்காட்டினார்.
இலங்கை அணித் தலைவனாக இருந்த குமாரா சங்காரா இலங்கையின் 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுவதற்கு முன் மும்பையில் ''உலகக் கோப்பையை வெல்வதே (எங்களுக்கு) எல்லாமும் ஆகும். நாங்கள் கடினமான காலத்திலிருந்து வந்திருக்கிறோம். எங்கள் நாட்டுக்காக பலபேர் உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். இப்புதிய எதிர்காலத்தில் இச்சூழ்நிலையில் நாங்கள் உலகக் கோப்பையை வென்றால் அது மேலும் மகிழ்ச்சியை ஊட்டும். ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் இலங்கையின் தேசியக் கொடியோடு வருகின்றார்'' எனப் பேசிய சொற்களில் தமிழினத்தைக் கொன்ற பெருமிதமும் அத்தோடு போதையூட்டுகிற உலகக் கோப்பை பெறுகிற கனவை இணைக்கும் இனவெறியும் தெளிவாகப் புலப்பட்டது.
தாங்கள் இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதற்கான சாட்சிகள் உள்ளன. போர் அல்லாத பகுதிகளில் தாக்குதல் நடத்தக்கூடாது என்று கலைஞர் தெரிவித்துள்ளார். பாலச்சந்திரனின் புகைப்படங்கள் இலங்கை ராணுவத்தால் எடுக்கப்பட்டது. விசாரணை நடத்தினால் இலங்கையின் போர்க்குற்றங்கள் வெளிவரும். இலங்கைக்கு இந்திய ராணுவம் உணவுக்கப்பல்களை அனுப்பியபோது பெருமைப்பட்டோம். இளைஞர்கள் உங்கள் நடவடிக்கைகளை உற்று நோக்கி கொண்டிருக்கிறார்கள்.  என்று 07.03.3013 அன்று நீங்கள் நாடாளுமன்றத்தில் கண்ணீர் மல்க உரையாற்றியதை யூடூப்பில் திரும்ப திரும்ப பார்த்து உங்களுக்குள் இவ்வளவு உணர்ச்சிகளா என்று நாங்கள் உறைந்து போனோம். http://www.youtube.com/watch?v=jbplTwB2RR4
IPL 2013 கிரிக்கெட் சீசனில் (ஏப்ரல் 3 முதல் மே 26 வரை) நடைபெறும் போட்டிகளில் தங்கள் குடும்ப நிறுவனமான சன் தொலைக்காட்சி நிறுவனம் தனது ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக குமாரா சங்ககாரா, திசாரா பெரிரா ஆகியோருக்கு தலா ரூ.3.5 கோடிக்கு சம்பளம் கொடுத்து ஏலம் எடுத்துள்ளது. இவர்கள் இருவரும் சுமார் 15 போட்டிகளில் சென்னையை தவிர்த்து மற்ற இடங்களில் விளையாட போகிறார்கள். நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில் 10 சதவீதம் இலங்கை கிரிகெட் வாரியம் மூலமாக இலங்கை இனவெறி அரசுக்கு போய் சேருகின்றது. இது தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் செயலாகும்.
இச்செயலை நீங்கள் உடனடியாக தடுத்து நிறுத்தியாக வேண்டும். இல்லையென்றால் உங்கள் குடும்பத்திற்கு மிகப்பெரிய இழிச்சொல்லை கொண்டு வந்து சேர்த்து விடுவது மட்டுமல்லாமல், வருகின்ற நாடாளுமனற தேர்தலிலும் உங்களுக்கும், நீங்கள் சாந்திருக்கின்ற  திமுக-விற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்புகளை ஏற்ப்படுத்தும் என்பது உறுதி.
எனவே தமிழ்நாட்டின் நலன் மீது மிகுந்த அக்கறை கொண்ட குடும்பத்தில் இருந்து வந்த நீங்கள் முயற்சி எடுத்து ஹைதிராபாத் சன்ரைசர் அணியில்ருந்து இனபடுகொலையாளர்கள் குமாரா சங்ககாரா, திசாரா பெரிரா ஆகியோரை உடனடியாக நீக்க வேண்டும் என்று கேட்டு கொள்கின்றோம். 
இப்படிக்கு
இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம். தமிழ்நாடு

No comments:

Post a Comment