Tuesday 21 June 2011

ஏன் இன்னும் மெளனம்



ஏன் இன்னும்மெளனம்


உலகம் முழுவதும் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு ஏதிராக
மனிதநேயம் கொண்ட ஒவ்வெருவரும் தங்களின் குரலை
ஒலித்துக்கொண்டுஇருக்கும் வேலையில் எம் இஸ்லாமிய
சகோதரர்களே என்ன நேர்ந்தது உங்களுக்கு.....

முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்து ஒருலட்சத்து ஜம்பதனாயிம்
மக்கள்கொல்லப்பட்டு,இன்னும் இலங்கை சிறையில் தமிழ் இளையவர்கள்,பென்கள் தினம் சித்தரவதைகள் அடைந்து செத்துக்கொண்டு இருப்பதை நீங்கள் அறிவீர்களா..?

போர் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்னும் எம் மக்கள்
முள்வேலி முகாம்களில் ஆடு மாடுகளைப்போல் அடைத்து வைத்திருப்பதை நீங்கள் அறிவீர்களா...?

ஈழத்தில் இன அழிப்புத்தான் நடந்தது என்று தினம் தினம்
ஊடகங்கள் மூலம் செய்திகள் வருகிறது
மனிதநேயம் கொண்ட ஒவ்வெறுவரும் சிங்களநாய்களின்
படுகொலைகலை கண்டித்து வரும் வேலையில் நீங்கள்மட்டும் ஏன் மவுனிக்கிறீர்கள்...?

திருநங்கைகள் கூட வீதிக்கு வந்து போரை நிறுத்தகூறி போராடினார்கள்....?
எம் தமிழினத்தின் மாவீரன் முத்துக்குமார் உட்பட 18 மனிதபிமானிகள் சிங்கள நாய்களே போரை நிறுத்துங்கள்
இந்திய அரசே சிங்களபோர்வெறியர்களுக்கு துனைபோகாதே
என்று தங்கள் தேக்கு மர தேகத்தில் தீவைத்து தங்களை தாங்களே மாய்த்து கொண்ட அந்தமாவீரர்கலை பற்றியாவது உங்களுக்குத்தெரியுமா..?

உலகம் முழுவதும் ஊடகங்கள் இலங்கையில் நடந்த இன அழிப்பு
கொடுரத்தை பற்றி எழுதியும் பேசியும் வரும் வேலையில் தமிழகத்தில் இருக்கும் சில இஸ்லாமிய இயக்கங்கள்
ஈழத்தில் என்றோநடந்த சம்பவங்கலைப்பற்றி பேசியும் எழுதியும்
நடந்த இனப்படுகொலையை நியாப்படுத்துகிறார்கள் உனர்வுடன்
 எம் இன மக்களை தமிழர்கள் என்று பார்க்கவேண்டாம் மனிதர்கள் என்றாவது பார்க்களாமே...
ஒரு மனித அழிப்பு அவலம் பக்கத்தில் 18மைல் அருகில் நடக்கிறது அதை எதிர்க்கதுப்பில்லாதவர்கள் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்றும் மனிதநேயத்தை பற்றியும் பேச அருகதை அற்றவர்கள்....!

உன்மைகளை மறைத்து இஸ்லாமிய மக்களிடம் தவறான தகவல்கலை கூறி உனர்வுமிக்க இஸ்லாமிய இளையவர்களை
மூளைச்சலைவை சொய்துவரும் இம் மரண வியபாரிகளை இஸ்லமிய மக்கள் புரிந்த்து கொள்ளவேண்டும்....

என் இனிய இஸ்லாமியசகோதரர்களே....
மதுரைகுழுங்கட்டும்,சென்னை நடுங்கட்டும் என்று தேர்தல் வந்தால்மட்டும் வீதிக்கு வரும் இவர்கள் நாஜீ இட்லர்கூடசெய்யத
இனப்படுகொலை செய்த இலங்கை அரசு பயங்கரவாதத்தை எதிர்த்து இவர்கள் வீதிக்கு வந்ததுண்டா..?
 இவர்கள் ராஜபட்சேவுக்கு பங்காளியா? இல்லை இனப்படுகொலையை ஆதரிக்கிறீர்களா...?

பாலஸ்தீன்,ஈராக்,ஆப்கான்,இன்னும் அமெரிக்கஏகாதிபத்திய
ஆக்கிரமிப்பை ஏதிர்த்து போராடும் நீங்கள் அங்கு கொல்லப்படுவது மூஸ்லிம்கள் என்பதால்தான..?
ஈழத்தில் கொல்லப்பட்டது இந்துக்கள் என்பதால்தான்
நீங்கள் போராடவில்லையா?
தமிழகமீனவர்கள் 500க்கும் மேற்ப்பட்டோர் சிங்கள இனவெறி
நாய்களால் கொல்லப்பட்டார்களே
அந்தகொல்லப்பட்டதமிழகமீனவர்களுக்காகதான் நீங்கள்
போராடியதுண்டா..?
அன்புஇஸ்லாமிய உறவுகளே...
உலகம்முழுவதும் இஸ்லாமியமக்கள்தாக்கப்பட்டபோதும்,
ஏன் இந்தியதுனைகண்டத்தில் எங்கு இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டாலும் குரல்கொடுக்கும்நீங்கள் தமிழகமீணவர்கள்
எம்தேசகடல்வெளியில் சிங்களவெறிநாய்களின் அகோர பசிக்கு
இரையாவதை எதிர்த்து நீங்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை
அவர்கள் இந்துக்கள்,கிருத்துவ மீணவர்கள் என்பதாலா..?
இதுவே கொல்லப்பட்டது முஸ்லீம் மீணவன் என்றால்...?

சரி ஈழத்தில் எம் இன உறவுகள் ஒட்டுமொத்தமாக
இன அழிப்பு,ஆக்கிரமிப்பு போரில் நாங்கள் பலி கொடுத்துவிட்டோம் எங்கள் வீட்டில்தான் இழவு விழுந்தது
நாங்களேஅழுதுகொல்கிறோம் நீங்கள் எங்களுக்காக அழவேண்டாம்..

இந்ததேசத்தில் அனைத்துமக்களுக்குமான வாழ்வாதார பிரச்சனைகளுக்காக எம்தேசதெருக்களில் பெட்ரோல்விலைஉயர்வு,விலைவாசிஉயர்வு, எம் மன்னையும்,எம்தேசவிவசாயிகளையும் பாதிக்கும்வெளிநாட்டு
பூச்சிக்கொல்லிகம்பெனிகள் எதிர்ப்பு, பயங்கரவாத ஆள்தூக்கி
சட்டங்கள் எதிர்ப்பு இன்னும் இன்னும் ஏராளமான மக்கள்
பிரச்சனைகளுக்காக தெருக்களில் இறங்கி போராடி,துப்பாக்கி
குண்டுகளும்,தடியடிகளும்,சிறைவாசங்களும் ஏற்றஎம் மக்களோடும்,எம் உரிமைக்காகபோராடும் போராளிகளோடும்
என்றாவது வீதிகளில் இறங்கிபோராடியதுண்டா...?
இல்லை இஸ்லாமிய இயக்கங்கள்,கட்சிகள்தான் இப்படியான
பொதுபிரச்சனைகளை முன்னிறுத்தி என்றேனும்
போராடியதுண்டா...?
யார் யாரோ போராடி, சிறை சென்று,செத்து அந்த போராட்டத்தின்
விளைவாககிடைக்கும் பலன்களைமட்டும் நீங்கள் அறுவடை செய்து கொள்வீர்கள்...?


இராக்கில்,பாலஸ்தினத்தில்,ஆப்கனில் இஸ்லாமியர்களின்மீதான
அமெரிக்கவின்,இஸ்ரேலின் ஆக்கிரமிப்புபோருக்கு ஏதிராக பீகார்,
சதீஸ்கர்,அந்திராவில் தண்டகாருன்ய காடுகளில் இருக்கும்
பழங்குடிமக்களை நக்சல்பாரி.மவோஸ்ட்புரட்சியாளர்கள்
அனிதிரட்டி அந்த அடர்ந்த வனத்திற்க்குள் பேரணிகளும்
ஆர்ப்பாட்டங்களும் நடத்தியதாவது அன்பு இஸ்லாமியஉறவுகளே,
இஸ்லாமிய இயக்கங்களே உங்களுக்குதெரியுமா..?
 அந்த பழங்குடி மக்களுக்கு அமெரிக்கவும்,ஈராக்கும் தெரியாது
ஆனல் ஒரு கொடுமைக்கு எதிராக,படுகொலைகளுக்கு எதிராக
போராடவேண்டும் என்ற பழங்குடி மக்களுக்கு இருந்த மனிதநேயம் மனிதநேய மார்க்கம் பேசும் உங்களுக்கு ஏன் இல்லை?

குஜராத்தில் இஸ்லாமியமக்கள்மீது இந்துவாவாதிகளும் நரமாமிச
நரேந்திரமோடியும்கலவரத்தைதுண்டிவிட்டபோது இஸ்லாமியர்கள்
மீதான இனவெறிதாக்குதலென்றும் குஜராத்தில் நடந்தது ஒரு
இனப்படுகொலைஎன்று நக்சல்பாரிகளும்,தமிழ்தேசிய போராளிகளும்,சனநாயகசக்திகளும்,மனித உரிமைபோராளிகள்,
எழுத்தளர்கள்,பத்திரிக்கையாளர்கள் என அனைவரும் வீதிகளில்
போராடினார்களே அதைத்தான் நீங்கள் அறிவீர்களா..?


இஸ்லாமிய சகோதர்களே....
நாம் எங்கோ அரபுதேசங்களில் இருந்துவந்தவர்கள் அல்லநாம்
நம்வேர்கள் இந்தமண்னில் உள்ளது.
இந்தமண்னின் அனைத்து உரிமைகளையும் நமதாக்குவோம்
அனைத்துவிதமானஒடுக்குமுறைகளுக்கும் எதிராகஅனிதிரள்வோம்
மொழி,இனம்,பாதுகாக்கபோராடுவோம்
ஈழத்தில்நடந்த இனப்படுகொலைகளுக்குஎதிராகபோராடுவோம்
மனிதநேயம்பேசிக்கொண்டு ஈழத்தில்நடந்த இனப்படுகொலையை
கண்டித்து எதுவும்பேசாத எதிர்த்துபோராடாத இனவெறியன்
ராஜபக்சேவைஎதிர்க்காத இஸ்லாமிய இயக்கங்களைபுறக்கணிப்போம்
ஈழமக்களுக்காகதன் உயிர்நீத்த அப்துல்ரவுப்பைநினைவுகூர்வோம்

இஸ்லாமியர்களே..!    இயக்கங்களே.!
நீங்கள்மனிதநேயர்கள் என்றால்
ஈழத்தில் படுகொலைசெய்யப்பட்டது அந்தபிஞ்சுகள் நம்குழந்தைஎன்றால்
சர்வதேசசட்டங்கள் அனைத்தையும் மீறி மனிதபேரழிவைஏற்படுத்திய இலங்கையை நீங்கள் எதிர்க்கவில்லை என்றால்
 உங்களிடம் மனிதநேயமும் இல்லை
மார்க்கமும் இல்லை
ஏன் நீங்கள் மனிதனே இல்லை


                   உமர்கயான்.சே







Sunday 12 June 2011


இன்று[12.6.11] சமூக உரிமைகளுக்கானஆசிரியர் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த கல்விக்கான கலந்தாய்வுக்கூட்டம் திருப்பூர் குமார் விடுதியில் சிறப்பாக நடந்தது.
கூட்டத்தில் சமச்சீர்கல்வியை உடனே அமுல்படுத்தவேண்டும்,
அனைத்து சனநாயகசக்திகளை ஒருங்கினைத்து கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. கூட்டத்தில்.மனித உரிமைப்போராளியும், இன்று[12.6.11] சமூக உரிமைகளுக்கானஆசிரியர் இயக்கம் தமிழகஒருங்கினைப்பாளர் தோழர் கண.குறிஞ்சி. இனைதமிழகஒருங்கினைப்பாளர்.சு.மூர்த்தி.தாய்தமிழ்
தொடக்கப்பள்ளிதலைவர்.தங்கராசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.சமூகநீதிக்கான வழக்கறிஞர்கள்சங்கம் சார்பாக நான்கலந்துகொண்டேன்.
             உமர்கயான்.சே.

Thursday 9 June 2011

தோழிஎன் தோழி

எம் மாவீரதோழியின்உயிர்ப்பான வரிகளை கேளுங்களேன்

முறியடிப்போம்


முறியடிப்போம்

இன உனர்வாளர்களின் மீதான உளவியல் தாக்குதல்களை முறியடிப்போம்.
தமிழக அரசியல்களத்தில் இன்றுதவிர்க்கமுடியாதஒரு அரசியல் கட்சியாக நாம்தமிழர்கட்சி இருந்து வருகிறது
தமிழ்தேசிய அரசியல்.ஈழவிடுதலைக்கான அரசியல் என்று நாம்தமிழர்கட்சி தனது அரசியல் களத்தை வகுத்துக்கொண்டு
தமிழகத்தமிழர்களிடமும்.உலகத்தமிழர்களிடமும் ஒரு மாற்று
அரசியலை முன்வைக்கும் இவ்வேலையில் அக்கட்சியின் முதன்மைஒருங்கினைப்பாளர் தோழர்சீமான்மீதானஒருநடிகையின்
திடீர்குற்றச்சாட்டுகள்மேற்கண்ட அக்கட்சியின் அரசியல்வளர்ச்சியைமுடக்கவேண்டும் என்ற இனபகைவர்களின்
அரசியல் சூழ்சி என்பதைதமிழ்மக்கள்புரிந்துகொள்வார்கள்.
 ஊடகங்கள் சீமான் எம்மக்கள் கொல்லப்படுகிறார்கள்ஈழத்தமிழ்
மக்களின் மீதானபோரைஉடனேநிருத்தவேண்டும் என்று கத்திகதரும்போதுஎந்தஊடகங்களும்கண்டுகொள்ளவில்லை
ஆனால் இன்று சன் தொலைகாட்சி அந்த நடிகையே வெறுத்துபோகும் அளவிற்க்கு மீண்டும்மீண்டும் ஒளிபரப்பிகொண்டுஇருக்கும்,அதற்க்குபின் இருக்கும் அவர்களின்
அசிங்கமான அரசியலை என்னவென்று கூறுவது.இவர்கள் எப்போழுதும் திருந்தாத ஊடகவிபச்சாரிகள்.
இக்குற்றச்சாட்டிற்க்கு பின்னனியில் தமிழகத்தில் செத்துப்போன
கொலைகாரகாங்கிரஸ்கயவானிகள்தான் இருக்கீறார்கள் என்பதற்க்கு சான்றாக சென்னை காவல் ஆனையர் அலுவலகம்
முன்பு சுவரொட்டியை உடனே ஒட்டுகிறார்கள் அயோக்கியர்கள்.
நாம்தமிழர்கட்சியை அரசியல்ரீதியாக எதிர்கொள்ளமுடியாத
கோழைகள் அக்கட்சியின் ஒருங்கினைப்பளர் தோழர் சீமான்மீது
ஒரு உளவியல் தாக்குதளை தொடுத்துள்ளது.
தமிழக மக்களே....
இன உனர்வாளர்களின் மீதான அவதூறுகளை முறியடிப்போம்!
எம் இன எதிரிகளை இனம்காண்போம்..!
தமிழ்தேசியபோராளிகளுக்குதுனைநிற்ப்போம்!
காங்கிரஸ்,சிங்களவனின் கள்ளக்கூட்டனியை
அம்பலப்படுத்துவோம்!

  இனப்பகைவர்களே!
 
மானுடபோராளிகள் எதற்க்கும்
மண்டியிடமாட்டார்கள்
சிறையின் சித்திரவதைகள்
சீற்றத்தின் ஆனிவேர்கள்
அவர்கள் மழைகாலங்களில்
முளைக்கும் காளான்கள் அல்ல
மறைந்துபோக
மார்க்சிய.பெரியாரின்
மாணவர்கள்
மீண்டும் மீண்டும்
எழும் பீனிக்ஸ் பறவைகள்...
              உமர்கயான்.சே

Wednesday 8 June 2011


தனிஓசை

வசந்தத்தின்
வாசல்களை தொடமுடியாத
சிறகொடிந்த பறவை இது

இது ஏனோ
எதற்க்கோ
கூவிதிரிகிறது..
அதன் மனதிற்க்குள்
அழும் ஓசை
ஒற்றைபுல்லாங்குழலாகிறது.....

அந்த அடர்ந்த வனத்திற்க்குள்ளே
சூரியனின் ஒளிச்சேர்க்கை
இன்னும் ஏனோ
தொடமுடியாத தூரத்தில்

இளவேனிற்காலத்தின்
இருண்ட இரவில்
நம்பிக்கை மட்டுமே
அதற்க்கு வெளிச்சமாய்..
 அது பாடும் பாடல் எல்லாம்
அன்பே
உன்பெயர்தானே....!
         
                உமர்கயான்.சே

Monday 6 June 2011


கனவு

மூடியதிரையில் ஓடும்
கம்பியில்லாதந்தியின்
காட்சி பதிவுகள்....!

காதல்

என்னத்தைசிதறவிட்டு
எங்கெங்கோசெல்லுகிற
சின்னஞ்சிறுசுகளின்
கண்ணாம்பூச்சிவிளையாட்டு...!

Sunday 5 June 2011


திருப்பூரில்தந்தைபெரியார்சிலைவைக்க இந்துமுண்ணனி
எதிப்பு. கிளர்த்துஎழுந்தனர் தந்தைபெரியார்திராவிடர்கழகத்தினர்
இன்று[5.6.11மாலை4மணிக்கு திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில்தடையைமீறிஆர்ப்பாட்டம் தோழர்கள்கைது
தடைஉடைப்போம். தமிழ்நாடு தமிழருக்கே!

தடை உடைப்போம்


திருப்பூரில்தந்தைபெரியார்சிலைவைக்க இந்துமுண்ணனி
எதிப்பு. கிளர்த்துஎழுந்தனர் தந்தைபெரியார்திராவிடர்கழகத்தினர்
இன்று[5.6.11மாலை4மணிக்கு திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில்
தடையைமீறிஆர்ப்பாட்டம் தோழர்கள்கைது
வழக்கறிஞர்கள்.தோழர்.கனகசபை,உமர்கயான்.உட்படதிரளானதோழர்கள் பங்கெடுப்பு.தடைஉடைப்போம். தமிழ்நாடு தமிழருக்கே!

Saturday 4 June 2011

உள்மனஓசைகள்

உள்மனஓசைகள்



இது
சிறகைத்தொலைத்துவிட்ட
சின்னப் பறவையொன்றின்
உறவின் பரிபாசை
உள் மனதின் தனி ஓசை...

பாலைவனச் சோலை ஒன்றில்
பாடவந்தமனக்குயிலின்
பாசையில்லா ராகமிது...!

அடிவானிற்க்கப்பாலும்
அக்கினியின்ரேகைகளாய்

நீண்டு.... தொடர்கின்ற
நொடும்பாலைச் சூனியங்கள்..

இருட்டேழுதும் துயர்வேளை
இடர்சூழ்ந்த மனற்பாலை
குருட்டு மன ஒட்டகத்தின்
கூன் முதுகில் சஞ்சாரம்....!

புழுதி புயலடித்துப்
புலப்படாதவெட்டவெளி
இதயப்பயனி ஒன்று
இலைப்பாற என்ன வழி...

எட்டுதிக்கும் கானலென்றால்
ஈச்சமரம் கான்பதெங்கே..?
 உச்சிவெயில் தோழுரிக்க
உடைமுள்ளோ கால் துழைக்க
அத்துவானப்பொட்டலிலே
அண்டநிழல் பார்பதேங்கே...?

நெருப்புகோழிகளாய்
தலைநிமிர்ந்து வரும்
   நினைவுகலை
துயர வேட்டைக்கரன்
துரத்தையிலே என்ன செய்ய..?


மறதி மணல் வெளியில்
மனசை புதைத்திடவோ..?

மனதின் கனவுகளை
மறுபடியும் சிதைத்திடவோ...?


சொல்தோழி சொல்

சொற்களுக்கும் சிறை என்றால்..


என் உள் மன ஓசைகள்
இனி
உருகி உயிர்த்தோடும்
 பாலைவனத்தில்
பட்டுநிற்க்கும்
ஈச்சைகள் உயிர்பெரும்

விழிச் செடிகள்
கண்ணீர்பூக்கும்.....

    உமர்கயான்.சே



 

சனநாயகம்


 சனநாயகம்



அரிசியை சிந்திவிட்டு
உமிக்காக அடுப்பெரிக்கும்
முதுகிலே கண்முளைத்த
நாட்டில்....!

வேட்டியை விற்றுவிட்டு
நிர்வாணத்திடம்
கோவனத்திற்காய்
ப்ல்லிளிக்கும்
கூனல் சனநாயகம்...

இங்கே.!
விளையாட்டுப்போட்டிக்கும்
பலகோடி

சடடமன்ற்த்தில்
தலையாட்டும்
போட்டிக்கும் பலகோடி
வாக்களித்தமக்களுக்கோ
தெருக்கோடி....!


மின்மினிகள்
கண்ணடிக்க-இங்கே
தாரகைகள் எங்கோ
தலைமறைவாய் வாழும்...

கூழாங்கற்களின்
குன்று மூலையின் கீழ்
வைரத்துண்டுகள்-பாவம்
வருமை பள்ளத்தின்
வயிற்று மடிப்பில்
இடிகளின் வயிற்றில்
பிடுங்கப்பட்ட
மின்னல்கொடிகள்...!

அடடா
ஆதிக்கசர்க்காரின்
அதிகாரகழிப்பறையின்
பாதிக்கப்பட்ட
துடைப்பங்களாய்...

எரிதழல்வேலேடுத்து-தம்பி
இருட்டை கீற வாடா
எதிர்கால கனல் மழைக்காய்
நீயின்றே ஏந்தடா
நெருப்புபந்தம்...

சதிகார சர்க்காரின்
அதிகாரசாவுக்குப்ப்னியும்
சமுதய சந்தையின்
சத்தில்லா மந்தையா நீ?

கொதிக்கும் இரத்தத்தில்
குளித்து வரும் கூர்வேலே-நீ
 புலிகளையும் எலிகளாக்கும்
புதிய பொருளாதார மோகினியின்
பொய் முகத்திரை கிழிப்பாய்...!

எச்சரிக்கை என்று-நீ
உச்சரிக்கும் ஓசை உரசலில்
உதடுகளே தீபற்றட்டும்
அந்த அக்கினி புயல் நாக்கின்
அனலை சுவாசித்து
ஆகாசகோபுரங்கள்
  தீபிடிக்கும்.....

இனியும் இங்கே..
ஏழைகளின் இரத்தத்தில்
ஏகபோக அத்தர் எடுத்தால்
பிறளயங்கள் ஏற்ப்பட்டு
பேதங்கள் தூளாகட்டும்

பீட பூமி தாழ்ந்து
பிறக்கட்டும் சமதர்மம்.......!

               உமர்கயான்.சே








சிறை


சிறை




சிறைகளின்
செங்கற்க்களில்

மனித உரிமைகளும்
பூசிமெழுகப்பட்டவையே.....

பூட்டிய கம்பிகளுக்குள்
புதைக்கப்பட்ட உனர்வுகள்

பாரா ஊசார்
காவலர்களின் ஓசை
இருட்டைக் கிழித்து வரும்.....

மனித கழிவுகளை
மனிதன் அகற்றக்கூடாது
காகிதச் சட்டங்கள்,.....

இங்கே எங்களின்
விடிவே..!
மூத்திர சட்டியின்
முகத்தில்தான்.....!

விடிவுக்கு இங்கே
விடியல் இல்லை
விதிகளுக்கிங்கே இடமில்லை...
வருடங்கள்
வறட்சியாய் போகும்...

தண்டனைக்கு பின்தான்
விசாரனைகள்.....
குருகிய இடத்தில்
கூனியாய் சட்டங்கள்...

செவ்வாய் கிழமைகள்
மனு[ஆ]நீதிநாள்
மனுக்கள் இங்கே குப்பையில்

துரையிடம் என்னட..?
“ரிப்போர்ட்
கொடுவாள் மீசைகளின்
கொடுமைகள்....

எல்லா நாட்களிலும்
எங்கள் விடுதலையை
எதிர்ப்பார்த்த ஏக்கங்கள்....

நரகம் எப்படி இருக்கும்..?
 சிறைச் சாலையின்
மதில்களுக்குள்
ஒருமுறை வந்துபாருங்கள்..

எங்களுக்கு
வசந்தங்கள்
வசப்படவில்லை...

வசந்தங்கள்
வழி விடும்

சிறைகதவுகள்
தெறிக்கும்
மக்கள் புரட்சியில்...



              உமர்.சே