Tuesday 19 March 2013

மாணவர்கள் எழுச்சியால் தினறிய திருப்பூர்....


இன்று திருப்பூரில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக மனித சங்கிலி போராட்டமும் அதை தொடர்ந்து மாணவர்கள் சாலையை மறித்து மறியல் போராட்டமும் நடத்தினார்கள்.
காலை 11 மணிக்கு ஆரம்பித்த மாணவர் போராட்டம் மாலை 3 மணிவரை எழுச்சியுடன் நடந்தது.
திருப்பூர் மாவட்ட வரலாற்றில் சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் திருப்பூரை முற்றிலும் முடக்கிப்போட்ட நிகழ்வாக மாணவர் போராட்டம் அமைந்தது.
65க்கு பிறகு மாணவர்கள் ஒரு அரசியல் கோரிக்கைகாக வீதியில் இறங்கி எழுச்சியுடன் போராடுகிறோம் என மறியலில் இருந்த மாணவர்கள் தெளிந்த அரசியலோடு பேசியது மாணவர்கள் நமக்கு நிச்சயம் போராட்ட அரசியலை கற்றுக்கொடுப்பவர்களாக இருக்கிறார்கள் என்ற உண்மையை மறுக்கமுடியாது.
மாணவர்களோடு பெரும் திரளாக மாணவிகளும் எழுச்சியுடன் பங்கு பெற்று வின் அதிர முழக்கமிட்டது அங்கிருக்கும் பார்வையாளர்களை உணர்சியில் ஆழ்த்தியது.
சிலர் மக்களுக்கு இடையூறு என்று பேசும் பொழுது பொதுமக்களில் பெரும்பான்மையோர் நாங்களும் மாணவர்களுக்கு ஆதரவாக களத்தில் நிற்கிறோம் என்றும் அன்பு மாணவர்களே இன்றைக்கு உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது என்று கூறும் போது என் மனம் அந்த இடத்தில் நெகிழ்ந்தது.
அன்பான செல்வங்களே...
நீங்கள் கற்றுக்கொடுக்கிறீர்கள் போராட்டங்களை...
மாவோ சொன்னார்
இளையோரே நீங்கள் அதிகாலை சூரியன்கள்
இந்த உலகம் உங்களுடையது, எங்கள் உடையதும்தான்
இறுதியில் ஆராய்ந்து பார்த்தால் இந்த உலகம் உங்களுடையதே..!

அன்பு செல்வங்களே உங்களை கட்டி அனைக்கிறேன்...
தீ பரவட்டும்..
திருப்பூர் வழிகாட்டட்டும்...!

No comments:

Post a Comment