ஒரு முடிவின் தொடக்கம்.....
நம்பிக்கையின் கீற்று எமக்கு மார்ச்30 அரசியல் சிறையாளிகளின் விடுதலைக்கான தொடக்க கூட்டத்தின் மூலம் ஏற்பட்டு இருக்கிறது. நாம் கடந்த வருடம் நவம்பர் மாதத்திலேயே இசுலாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் சிறைவாசிகள் விடுதலைக்காக பொது தளத்தில் இயங்கவேண்டும் என்று திட்டமிட்டோம் அன்றைய அரசியல் சூழ்நிலையில் அது சாத்திய பட்டாமல் போனது எமக்கு வருத்தம் என்றாலும் இன்றைக்கு அதற்கான அடித்தளமிட்டுள்ளோம் என்று என்னும்போது மகிழ்சிதான், இன்னும் கடக்க வேண்டிய தூரம் ஏராளம்.....
இசுலாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் சிறைவாசிகளின் விடுதலை கோரி தமிழகத்தில் ஒரு பொது விவாதத்தை தொடங்கிவைத்துள்ளோம் பொதுச்சமுகத்தில் இதற்கான நியாயங்களை முன்வைத்துள்ளோம் இதை தொடர்ச்சியாக முன்னேடுத்து போவதில்தான் இவர்களின் விடுதலை சாத்தியப்படும் என்பது அனைவரும் அறிந்ததே..
இப்போராட்டம் இவர்கள் விடுதலையோடு முடிந்து போவதில்லை
மாறிவரும் உலக சூழலில் குறிப்பாக இந்தியாவில் அரச பயங்கரவாதத்தை எதிர்த்தும் மத தீவிரவாதத்தை எதிர்த்தும்,சாதிய அடக்குமுறைகளை எதிர்த்தும் அடிப்படை கோரிக்கைகளுக்காக போராடும் மக்கள் மீதும் மக்கள் தலைவர்கள் மீதும் ஏவப்படும் அடக்கு முறைகளை அவர்களின் சிறைப்படுத்தப்படுவதை எதிர்த்து நீண்ட போராட்டத்தின் தொடக்கமாகவும் இதை நாம் பார்க்கிறோம்.
இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலைக்கான போராட்டங்கள் இசுலாமிய இயக்கங்களால் மட்டும் முன்னேடுக்கப்பட்ட சூழ்நிலையில் இது பொது கோரிக்கையாக இன்றைக்கு மாற்றப்பட்டுள்ளது இதை நாம் வலுவாக பற்றி முன்னேடுக்கவேண்டும்.
மார்ச்30 நிகழ்வு நமக்கு ஏராளமாக கற்று கொடுத்துள்ளது. இந்நிகழ்வை நாம் திட்டமிட்டு முகநூலில் அறிவித்தவுடன் நிகழ்விற்கு கிடைத்த ஆதரவும், ஊக்கமும் எம்மை நெகிழசெய்தது. இந்நிகழ்வின் தலைமை பொருப்பேற்றிருந்த பெரியார் திராவிடர்கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் ஆதரவும் ஈடுபாடும் எம்மை தொடர்சியாக இயங்க வைக்கும் ஆற்றலை தந்தது என்றால் அது மிகையல்ல. பேராசிரியர் தீரன்,தோழர் தியாகு, வீரதாய் மகேஸ்,செங்கிஸ்கான்,தடா ரஹீம்,ஆளூர்ஷானவாஸ்,,அமீர் அப்பாஸ்,மை.வீரர் அப்துல்லா,செல்வம்,சம்சுதீன்,வழக்கறிஞர் அபுபக்கர் சித்திக்,கோவைசெய்யது,தீ்னதயாளன்,முபாரக்பாஷா ஆகியோர் கூட்டத்தின் நோக்கங்களை எடுத்துவைத்தவிதம் நிச்சயம் அரசின் செவிகளுக்கு எட்டி இருக்கும் என்றே நம்புகிறோம். இந்நிகழ்வில் கலந்துகொள்ளமுடியா சூழ்நிலையில் இருந்தாலும் நிகழ்வின் மீதான அக்கரையும் அரசியல் சிறைவாசிகளின் விடுதலையில் தங்கள் பங்களிப்பு எப்போழுதும் இருக்கும் என்று கூறி அடுத்த நிகழ்வில் நாங்கள் முன்நிற்போம் என்று கூறிய எனது மூத்த வழக்கறிஞர் தோழர் ப.பா.மோகன். தோழர் வன்னியரசு அற்புததாய். எங்களை நெகிழ செய்த உறவுகள்.
அடுத்து என்ன செய்யபோகிறோம்
ஒரு கூட்டம் நடத்தி அரசுக்கு கோரிக்கை வைத்தவுடன் இஸ்லாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகள் எதிர்வரும் அண்ணா பிறந்த தினமாம் செப்டம்பர்15 விடுதலை செய்யப்பட்டு விடுவார்களா?
இது அரசிற்க்கு எட்டுவதற்க்கு போதுமான வழி முறையா?ஒரு கூட்டத்தோடு நாம் திருப்திப்பட்டு முடங்கிவிடுவோமா?என்று நம்முன் கேள்விகள் ஆயிரம் இருக்கிறது.
சிறைவாசிகளின் அவல நிலை
14 ஆண்டுகளுக்கு மேல் சிறைப்பட்டு இருக்கும் அரசியல் சிறைவாசிகளின் நிலை, அவர்களின் துயரங்கள் நமக்கு போதுமான அளவு எட்டவில்லையோ என்று தோன்றுகிறது
தங்களின் உயிர்வாழும் உரிமை,சுதந்திர உரிமை,தங்களின் குடும்ப பராமரிப்பு கடமை கொண்டுள்ள இவர்களுக்கு நாம் என்ன செய்ய போகிறோம்.
தங்கள் சுய லாபத்திற்காகவா? இவர்கள் சிறைப்பட்டார்கள்?
சமுகத்திற்காக போராடி சிறைப்பட்ட இவர்களின் விடுதலைக்காக போராடுவது நமது கடமை அல்லவா?
உங்களுக்கு தெரியுமா தோழர்களே... கோவை சிறைவாசிகளின் துயரம்,அவர்கள் குடும்பம் படும் துயரம் வாரத்தில் இரண்டு நாட்கள் அவர்கள் குடும்பம் சிறைவாசிகளை சந்திக்க போகும் வேதனை இவர்கள் சிறையில் இருக்கும் வேதனையை விட கொடுமையானது 5 இடத்தில் சோதனை என்ற பெயரில் இவர்கள் படும் அவமாணங்கள் மீண்டும் சிறை சாலை சென்று பார்க்க வேண்டுமா என்று என்ன தூண்டும் அளவிள் மிக கொடுமை அங்கே அரங்கேறும்.பெண்கள் நிலையை என்னிபாருங்கள். நமது வீட்டில் எலவு விழுந்தால்தான் நாம் அழவேண்டுமா?
இஸ்லாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட அரசியல் சிறைவாசிகளுக்காக இசுலாமிய அமைப்புகள் அல்லாத பொது தலைவர்கள்,தமிழ்தேசியவாதிகள்,பெரியார் தொண்டர்கள்,தலீத் விடுதலையாளர்கள்.இடதுசாரிகள் களத்தில் உள்ளார்கள் இசுலாமிய சமுகம் எப்போழுது ஒன்று திரண்டு இந்த ஒற்றை கோரிக்கைகாக வீதிக்கு ஒற்றுமையாக வரபோகிறது?
வாருங்கள் பொது சமுகத்தோடு இணைந்து இசுலாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் சிறைவாசிகளின் விடுதலைக்காக குரல் கொடுப்போம், செப்.15 அவர்களின் விடுதலையை உருதிப்படுத்துவோம்.
நன்றியும் நேசிப்பும்
மார்ச்30 நிகழ்விற்கு வருகைதந்து ஒத்துழைத்து சிறைவாசிகளின் விடுதலைக்காக தங்கள் கரங்களை வாழும் உரிமைகாக ஏங்கி கொண்டிருக்கும் இசுலாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் சிறைவாசிகளோடு இனைத்துக்கொண்டதலைவர்கள். அவர்களின் அமைப்பு தோழர்கள், இந்நிகழ்வை நாம் ஏற்பாடு செய்து முகநூலில் அறிவித்தவுடன் முகநூலில் ஆதரவு கொடுத்து அதற்க்கான பிரச்சாரங்களை முன்னேடுத்த எமனேஸ்ஸ்வரம் சர்புதீன்,காரைகால் லப்பை,பாசில்,பரிமளராசன்,பாரதிவாசன்,சதிஸ்குமார்,பாலகார்த்தி இன்னும் ஏராளமான தோழர்கள் முகநூல் வழியாக நிகழ்வை உலகம் முழுவதும் எடுத்து சென்றார்கள் அவர்களுக்கு எமது நன்றியும்,நேசிப்பும். குறிப்பாக காரைக்கால் லப்பை அவர்களின் உதவி எம்மால் என்றும் மறக்க முடியா நினைவுகள்.
எம்மோடு இனைந்து களமாடிய எனது முண்னனி தோழர்கள் நாசர்தீன்,காளிஸ்வரன்,லத்திப்,சதிஸ்குமார்,அப்துல்லா அண்னன்,சுக்கூர் அண்னன்.,இன்னும் பெயர்குறிப்பிடதக்க ஏராளமான தோழர்கள் இவர்கள் இல்லை என்றால் நிகழ்வை சிறப்பாக்கி இருக்க முடியுமா? இவர்களுக்கும் எனது நன்றியும்,நேசிப்பும்.
கோவை சிறுபான்மை உதவி அறக்கட்டளை சம்சுதீன்,அவரோடு களமாடிய தோழர்கள். கோவை தங்கப்பா.மேலப்பாளையம் தோழர்கள்.மற்றும் தமிழகம் முழுவதும் ஆதரவுதந்த தோழர்கள்.உலகமுழுவதும் இந்நிகழ்வை இனையத்தின் மூலம் நேரலை செய்த திருச்சி ஈஸா. உலகம் முழுவது இந்நிகழ்வை வெற்றியடைய வாழ்த்திய தோழர்கள் உங்கள் அனைவருக்கும் நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் உங்களை அன்னியப்படுத்த நான் விரும்பவிலை. விளிம்பு நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் சிறைவாசிகளுகாக உங்கள் குரல் ஒலித்து கொண்டே இருக்கவேண்டும் அதனால் அவர்கள் விடுதலை சாத்தியப்பட்டால் அவர்கள் மகிழ்சி உங்கள் மகிழ்சியாக மாறும். அந்த மகிழ்சி என்றும் உங்களிடம் நிலைத்திருக்கும்.
இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளின் விடுதலைக்காக தனது ஆதரவும் களம்கான தனது ஒப்புதலையும் தந்துள்ள விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களையும் நன்றியுடன் நினைத்து பார்கிறோம் அடுத்தடுத்த நிகழ்வில் திருமாவின் விடுதலைக்குரல் ஒலிக்கும்....
மார்ச்30 அரசியல் சிறைவாசிகளின் விடுதலைக்காக இனையத்தின் மூலம் செய்திகளை சேர்பித்த கீற்று, அலை செய்திகள்,செங்கிஸ்கான் ஆன்லைன், INTJ இனையதளம் உள்ளிட்ட அனைத்து இனைய தளத்தோழர்களுக்கும் எமது நன்றியும் நேசிப்பும்.
தனது தனி இருப்பை கான்பிக்க வேண்டும் என்ற என்னத்தோடு எலவு வீட்டில் கூட அரசியல் செய்பவர்கள் மத்தியில் கடல் கடந்து வாழ்க்கை தேவைக்காக ஓடிக்கொண்டிருக்கும் வேலையிலும் கூட தன் குடும்பம்,தன் மக்கள் என்று அவர்கள் நலனைமட்டும் பார்க்காமல் சமுக விடுதலைகாய்,அரசியல் சிறைவாசிகளின் விடுதலைக்காய் தன்னை அர்பனித்துக்கொண்டு,
தனது வருமாணத்தில் பெரும்பகுதி தொலைபேசிக்கே செலவிட்டு தலைவர்களிடம் தொடர்புகொண்டும்,என்னிடம் தினமும் பலமுறை பேசி எமக்கு ஊக்க மருந்தாக எமக்கு இயங்கும் சக்தியை என்றேன்றும் அளித்துக்கொண்டு கடந்த நிகழ்வின் வெற்றியை பேசாமல் அடுத்த நிகழ்வை எங்கு எப்போழுது நடத்துவது என்று பேசிக்கொண்டிருக்கும் எனதருமை சகோதரர்.சிங்கப்பூரில் வாழ்ந்து கொண்டிருக்கும் வேங்கை.சு.செ இப்ராஹீம் அவர்களையும் நன்றியுடன் நினைத்துபார்க்கிறேன்.
உங்களுடைய ஆக்கமும் சிறைவாசிகளின் விடுதலை வரை உங்கள் ஒத்துழைப்பும் நாங்களும் அரசியல் சிறைவாசிகளும்.அவர்கள் குடும்பமும் எதிர்பார்கிறோம்....
விடுதலை ஏக்கத்துடன்........
சே.ஜெ. உமர்கயான்.
ஒருங்கினைப்பாளர்
இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்
தமிழ்நாடு.
1.4.2012
No comments:
Post a Comment