இஸ்லாமிய நன்பர்கள் குழு சகோதரர்களுக்கும் குழுவின் நிறுவுனர் சகோதரர் முபாரஸ் அலிக்கும்
அன்புசகோதரர்களே...
ஈழத்தில் நடந்த ஒரு மனித படுகொலைகளை கண்டித்தும்,மரணதண்டனைக்கு எதிராக நமது குழுவில் பதிவிட்டால் அதற்க்கு எதிர்கருத்து இருந்தால் ஆரோக்கியாமான அழகியமுறையில் பதில் கூறவேண்டும் அதைவிட்டு மிக இழிவாக முஸ்லீம் பெயரில் ஒருவர் பதிவிட்டு வருகிறார். அவர் உன்மையான முஸ்லீம் என்றால்
அவர் இஸ்லாமிய அடிப்படையில் இருந்து பதிவிடுவதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா..?
அவரின் மோசமான கருத்துக்களில் உங்களுக்கு உடன்பாடா?
நான் ஆரோக்கியமான எந்த விவாதங்களுக்கும் எப்போழுதும் தயார்.
குழுவில் உள்ள நன்பர்களே
நீங்களும் மொளனமாக இருப்பதைப்பார்த்தால் அந்த நபரின் கருத்துக்களை நீங்களும் ஆதரிக்கிறீர்கள் என்றே என்னத்தோன்றுகிறது.
வரம்புமீறி பேசும் மேற்கண்ட நபரை என்னாலும் வரம்புமீறி
பேசமுடியும்.ஆனாலும்
என்னை எப்படி இழிவு படுத்தினாலும் சிங்கள கொலை வெறி ராணுவத்தால் 1,50,000மக்கள் கொல்லப்பட்டதையும் ஒரு அநீதியான போரில் பாதிக்கப்பட்ட அப்பாவிமக்களின் பக்கமிருந்து
பேசுவேன் பேசிக்கொண்டே இருப்பேன்.
ஈழத்தில் மட்டும் அல்ல உலகில் எங்கு அநீதி நடந்தாலும் பேசுவேன், எழுதுவேன்.
எனது மார்க்கம் அநீதிகளுக்கு எதிராக அது எவன் என்றாலும்
எதிர்க்க கற்றுக் கொடுத்திருக்கிறது.
எனது சமுதாயம் பாதிக்கப்பட்டால் மட்டும் குரல் கொடுக்கும்
சுயநலவாதி அல்ல
திருக்குரான் இஸ்லாமிய மக்களுக்கு மட்டும் சொந்தமல்ல
அது உலக மக்களுக்கும் பெதுவானது
இவர்களைபோல உள்ளவர்களின் நிழையால் நமது சகோதர சமுதய மக்களிடம் அன்னியமாகிவருகிறோம்.
அன்பு சகோதரர்களே..
நாம் நமது உரிமைகளுக்காக போராடும் அதே வேலையில்
மற்றமக்களின் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக போராடுவோம்..!
நாம் நமது என்ற நிலையில் இருந்து அனைத்து மக்களோடும்
இனைவோம்...!
பெதுவான போராட்டங்களில் நமது பங்களிப்பை உறுதிசெய்வோம்...!
ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக அனிதிரளுங்கள்..!
அப்சல்குரு,பேரறிவளன்,முருகன்,சாந்தன் உள்ளிட்டவர்களின்
தூக்கு தண்டணைக்கு எதிராக அனிதிரளுங்கள்...
உமர்கயான்.சே
இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர்கள். தமிழ்நாடு
No comments:
Post a Comment