Saturday, 4 June 2011

உள்மனஓசைகள்

உள்மனஓசைகள்



இது
சிறகைத்தொலைத்துவிட்ட
சின்னப் பறவையொன்றின்
உறவின் பரிபாசை
உள் மனதின் தனி ஓசை...

பாலைவனச் சோலை ஒன்றில்
பாடவந்தமனக்குயிலின்
பாசையில்லா ராகமிது...!

அடிவானிற்க்கப்பாலும்
அக்கினியின்ரேகைகளாய்

நீண்டு.... தொடர்கின்ற
நொடும்பாலைச் சூனியங்கள்..

இருட்டேழுதும் துயர்வேளை
இடர்சூழ்ந்த மனற்பாலை
குருட்டு மன ஒட்டகத்தின்
கூன் முதுகில் சஞ்சாரம்....!

புழுதி புயலடித்துப்
புலப்படாதவெட்டவெளி
இதயப்பயனி ஒன்று
இலைப்பாற என்ன வழி...

எட்டுதிக்கும் கானலென்றால்
ஈச்சமரம் கான்பதெங்கே..?
 உச்சிவெயில் தோழுரிக்க
உடைமுள்ளோ கால் துழைக்க
அத்துவானப்பொட்டலிலே
அண்டநிழல் பார்பதேங்கே...?

நெருப்புகோழிகளாய்
தலைநிமிர்ந்து வரும்
   நினைவுகலை
துயர வேட்டைக்கரன்
துரத்தையிலே என்ன செய்ய..?


மறதி மணல் வெளியில்
மனசை புதைத்திடவோ..?

மனதின் கனவுகளை
மறுபடியும் சிதைத்திடவோ...?


சொல்தோழி சொல்

சொற்களுக்கும் சிறை என்றால்..


என் உள் மன ஓசைகள்
இனி
உருகி உயிர்த்தோடும்
 பாலைவனத்தில்
பட்டுநிற்க்கும்
ஈச்சைகள் உயிர்பெரும்

விழிச் செடிகள்
கண்ணீர்பூக்கும்.....

    உமர்கயான்.சே



 

No comments:

Post a Comment