Saturday, 4 June 2011

சனநாயகம்


 சனநாயகம்



அரிசியை சிந்திவிட்டு
உமிக்காக அடுப்பெரிக்கும்
முதுகிலே கண்முளைத்த
நாட்டில்....!

வேட்டியை விற்றுவிட்டு
நிர்வாணத்திடம்
கோவனத்திற்காய்
ப்ல்லிளிக்கும்
கூனல் சனநாயகம்...

இங்கே.!
விளையாட்டுப்போட்டிக்கும்
பலகோடி

சடடமன்ற்த்தில்
தலையாட்டும்
போட்டிக்கும் பலகோடி
வாக்களித்தமக்களுக்கோ
தெருக்கோடி....!


மின்மினிகள்
கண்ணடிக்க-இங்கே
தாரகைகள் எங்கோ
தலைமறைவாய் வாழும்...

கூழாங்கற்களின்
குன்று மூலையின் கீழ்
வைரத்துண்டுகள்-பாவம்
வருமை பள்ளத்தின்
வயிற்று மடிப்பில்
இடிகளின் வயிற்றில்
பிடுங்கப்பட்ட
மின்னல்கொடிகள்...!

அடடா
ஆதிக்கசர்க்காரின்
அதிகாரகழிப்பறையின்
பாதிக்கப்பட்ட
துடைப்பங்களாய்...

எரிதழல்வேலேடுத்து-தம்பி
இருட்டை கீற வாடா
எதிர்கால கனல் மழைக்காய்
நீயின்றே ஏந்தடா
நெருப்புபந்தம்...

சதிகார சர்க்காரின்
அதிகாரசாவுக்குப்ப்னியும்
சமுதய சந்தையின்
சத்தில்லா மந்தையா நீ?

கொதிக்கும் இரத்தத்தில்
குளித்து வரும் கூர்வேலே-நீ
 புலிகளையும் எலிகளாக்கும்
புதிய பொருளாதார மோகினியின்
பொய் முகத்திரை கிழிப்பாய்...!

எச்சரிக்கை என்று-நீ
உச்சரிக்கும் ஓசை உரசலில்
உதடுகளே தீபற்றட்டும்
அந்த அக்கினி புயல் நாக்கின்
அனலை சுவாசித்து
ஆகாசகோபுரங்கள்
  தீபிடிக்கும்.....

இனியும் இங்கே..
ஏழைகளின் இரத்தத்தில்
ஏகபோக அத்தர் எடுத்தால்
பிறளயங்கள் ஏற்ப்பட்டு
பேதங்கள் தூளாகட்டும்

பீட பூமி தாழ்ந்து
பிறக்கட்டும் சமதர்மம்.......!

               உமர்கயான்.சே








No comments:

Post a Comment