Thursday, 14 June 2012

களம்

இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளின்
விடுதலைக்காக தொடர் அரசின் கவன ஈர்ப்பு பொதுக்கூட்டத்தை
மாநாடாக மாற்றிய மேலப்பாளையம் மக்களும்..
அஞ்சி நடுங்கிய இன துரோகிகளும்….



அன்பிற்கினிய சகோதரர்களே…
இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளின் விடுதலைக்காக அரசின் கவனத்தை ஈர்ப்பது என்ற நோக்கத்தில் கடந்த மார்ச் மாதம் முடிவு செய்து மார்ச் முதல் ஆகஸ்ட் வரை தொடர் பிரச்சார இயக்கத்தை முன்னேடுப்பது என்று தீர்மாணம் செய்தோம். கடந்த காலங்களின் தொடர் படிப்பினைகளை கற்றுக்கொண்டு சிறைவாசிகளின் விடுதலைக்காக ஒரு தொடர்ச்சியான போராட்டம் இருந்தால் மட்டுமே அரசின் பார்வைக்கு செல்லும் என்று எண்னினோம்.
நாங்கள் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தை சேர்ந்த எமது தோழர்கள் திடீர் என்று எங்கோ வானத்தில் இருந்து குதித்தவர்களும்அல்ல…
எங்களின் இந்த போராட்டம் எங்களின் புதிய கண்டுபிடிப்பும் அல்ல..
ஏற்கனவே எமது முன்னோடி அமைப்புகள்,இயக்கங்கள்,தலைவர்கள், சமுக களத்தில் பல ஆண்டு காலமாக போராடிவருகிறார்கள் சிறைவாசிகளின் விடுதலைக்கோரிக்கைக்காக பலதளங்களில் வளிமையாக போராடியவர்கள்
இவர்களின் தொடர்ச்சிதான் நாங்கள் ஏற்கனவே நடந்த போராட்டங்களின் தொடர்ச்சிதான் எங்கள் போராட்டங்கள்….
நாங்கள் யார்…?

இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் ஒரு பொது மேடை
இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளின் விடுதலைக்காக ஒரு பொது களத்தை நாங்கள் அமைத்துள்ளோம்
எமக்கு எந்த இயக்க சார்போ, அல்லது அரசியல் சார்போ இல்லை
எமது மேடை அனைத்து இயக்கங்கள், கட்சிகள், தலைவர்கள் என்று அனைவரையும் பல்லாண்டுகாலமாக சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் உடன்படும் அனைவரையும் ஒரே களத்தில் ஒற்றுமையாக நிற்க்கவைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறோம்.
எமக்கு என்ன அக்கரை சிறைவாசிகளின்
விடுதலையில்…
இச் சமுகத்தில் சிறைவாசிகள் என்றாலே ஒரு கண்டுகொள்ளாபோக்கை நாம் கவனித்து வருகிறோம். அதிலும் குறிப்பாக இசுலாமிய சிறைவாசிகள் விடுதலையை பற்றி இசுலாமிய இயக்கங்கள் தாண்டி யாரும் பேசாநிலையில் ஆட்சியளர்களால் தொடர்ந்து புறக்கனிக்கப்பட்ட எம் சமுகம்
இழந்த உரிமைகளை வெல்லவேண்டும் என்ற அடிப்படையிலும், இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளின் விடுதலைக்கோரிக்கையை பொது சமுகத்திடமும், மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என்ற அடிப்படையில்தான் நாம் இவ் விசயத்தை கொண்டு செல்கிறோம்.
தனிப்பட்ட முறையில் அரசின் அடக்கு முறைகளுக்கு ஆட்பட்டு 16,வயதில் வேலூர் சிறையிலும், 17 வயத்தில் கோவை மத்திய சிறையிலும் பல்வேறு பொய்வழக்குகளில் தேசிய பாதுகாப்பு சட்டம் உட்பட பலவழக்குகளை சந்தித்து 3 வருடங்கள் சிறையில் இருந்ததும், சிறையில் இருந்த நாட்களிலேயே சிறைவாசிகளின் உரிமைகளுக்காக சிறையில் போராடியதும்
நான் சிறையில் இருந்த நாட்களில் சிறையில் இருந்த இன்னும் சிறையில் இருக்கும் எம் சகோதரர்களுக்கு எம்மை பற்றி நன்கு தெரியும்.
எமக்கு விளிம்பு நிலையில் இருந்து வரும் எமது சிறை சகோதரர்களுக்காக, அவர்களின் விடுதலைக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உண்மையான நோக்கத்தில் மட்டுமே செயல்படுகிறோம், எமக்கு எந்த வித அரசியல் ஆதாயமோ, அல்லது நானோ என்னுடன் இருக்கும் தோழர்கள் பெரிய தலைவர்கள் ஆகவேண்டும் என்ற நோக்கமோ இல்லை, சிறைவாசிகளின் விடுதலைக்கான இந்த போராட்ட களத்தின் 4மாதங்களும் நாங்கள் படுவது துயரங்கள் மட்டுமே. தினம் தினம் மன உளைச்சலுக்கு ஆளாகுவது மட்டுமே
எமக்கு மிஞ்சி வருகிறது.
ஒரு கூட்டம் நடத்துவதற்கே பெரும் போராட்டங்கள் 4 கூட்டங்களை இறைவனின் கிருபையால் நடத்தி உள்ளோம்.
எங்களின் சொந்த பொருளாதாரமும்,நண்பர்களின் உதவியுடனும்,இன்னும் கருனையுள்ளம் கொண்ட பொது நபர்களின் உதவி கொண்டே இத்தொடர் நிகழ்வுகளை நடத்தி வருகிறோம்.
நான் தமிழகத்தின் சிறந்த மனித உரிமைப்போராளி வழக்கறிஞர் ப.பா.மோகன் அவர்களிடம் இளம் வழக்கறிஞராக இருந்துவருகிறேன் எனது வாழ்க்கை தேவைகளை மட்டும் பார்த்துக்கொள்வதற்கும்,இன்னும் வளமாக வாழ்வதற்க்கும் எனது வழக்கறிஞர் தொழிலில் வரும் வருமானத்தை பார்த்துக்கொண்டிருக்கலாம் எமக்கு எதற்கு இந்த தேவையற்றவேலை என்று பல நண்பர்கள் அறிவுரை கூறுகிறார்கள் ஆனால் சகோதரர்களே எல்லோரையும் போல் எம்மால் இருக்கமுடியவில்லை நாம் வாழும் காலத்தில் உண்மையாக ஏதாவது செய்துவிட்டுதான் செத்துப்போகவேண்டும் என்ற உணர்வே எம்மிடம் மேலோங்கி இருக்கிறது.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாம் என்ற பழ மொழிக்கேற்ப
இன்று நீண்ட காலமாக பேசப்படாமல் முடங்கி கிடந்த இசுலாமிய அரசியல் சிறைவாசிகளின் அப்போராளிகளின் பிரச்சனையை நாம் முன்னேடுக்கும் போது  அரசும் காவல்துறையும் கூட அனுமதிக்கும் போது இஸ்லாமியர்கள் என்றும் தான் இறைவழி நடப்பதாகவும் கூறிக்கொள்ளும் சிலர் எமது தொடர் போராட்டங்களுக்கு இடையூறு செய்வதின் மர்மம் எமக்கு புரியவில்லை
இவர்கள் இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலையில் அக்கரை கொண்டவர்களா..? என்ற சந்தேகமும். இவர்கள் சிறைமீள்வதில் விருப்பம் அற்றவர்களாகவே இருப்பார்களோ என்ற என்னம் எம்மிடம் தோன்றுகிறது.
நாம் எவருக்கும் போட்டியாக இயக்கம் நடத்தவில்லை,எம்மை வளர்த்திக்கொள்வதற்கும் இயக்கம் நடத்தவில்லை சிறைவாசிகள் பெயரை கொண்டு பொருக்கிதிங்கவும் சிறைவாசிகளின் விடுதலையை கோரவில்லை
எமது என்னம் தூய்மையானது எமக்கும் எம் இறைவனுக்கும் மட்டுமே
தெரியும்.
நாங்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளுக்கும் அரசின் பொது மண்னிப்பில் மட்டுமே விடுதலை என்று நிலையில் இருக்கும் சகோதரர்களுக்காக அரசின் பொது மண்னிப்பை வேண்டியும், செப்,15 அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்யவேண்டும் என்ற ஒற்றைக்கோரிக்கை மட்டுமே நாங்கள் வைக்கிறோம் அதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல தமிழகத்தில் அறியப்படதக்க அரசியல் கட்சி தலைவர்கள், இசுலாமிய இயக்கங்களின் தலைவர்களை அழைத்து இக் கோரிக்கைகளை வழியுறுத்தி பேச மேடை அமைக்கிறோம், யார் ஒருவருடைய பிழைப்பிளும் நாங்கள் கைவைக்கவில்லை இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலையில் முட்டுக்கட்டை போடுபவர் எவரும் உண்மையான முஸ்லீமாக இருக்கமுடியாது என்று தின்னமாக நம்புகிறோம்.
இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலைக்கான எமது பயணத்தில் குழப்பம் விழைவித்தாளோ அல்லது அவதூறு செய்தாளோ நாம் இனி பொருத்துக்கொண்டிருக்கமாட்டோம் இனி அனைத்து விசயங்களைப்பற்றியும் பேசவேண்டுயது இருக்கும் என்று எச்சரிக்கை செய்கிறோம் நாங்கள் எங்களின் வழியில் தூய்மையான நோக்கத்தோடு, போராட்டகுனத்தோடு பயணம் செய்கிறோம் வழக்கமாக நீங்கள் செய்வதை செய்து கொண்டிருங்கள். எழுந்து வரும் இப்போராட்ட அலையை உங்களால் முடக்கமுடியாது எங்களால் இயன்றவரை நாங்கள் போராடுவோம்,
எங்களில் கடைசி ஒரு நபர் இருக்கும் வரை எங்களின் இப்போராட்டம் ஓயாது. எங்களால் 1000 நோட்டீஸ் மட்டுமே அடிக்கமுடியும் என்றால்கூட
ஒவ்வொறு வீடாக கதவை தட்டி இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளுக்காக அவர்களின் விடுதலைக்காக நாங்கள் பேசுவோம், பேசுவோம் பேசிக்கொண்டே இருப்போம்…
அரசு செய்யாத செயலை, பாசிஸ்டுகள் செய்யாத செயலை செய்யும் நீங்கள் நிச்சயம் பெரியவர்கள்தான் ஒப்புக்கொள்கிறோம். உங்கள் முன் எங்கள் தோழ்வியை ஒப்புக்கொள்கிறோம்.
இச்சமுகம் என்று ஒன்று பட போகிறது…..
ஒரே பார்வை ஒரே கொள்கை என்று வரப்போகிறது.
ஏக்கங்களுடன்…..

நன்றியும் நேசிப்பும்
நாம் தொடர் கூட்டங்களை கடந்த மார்ச் முதல் நடத்தி வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே திருபூர்,கோவை, மக்கள் மன்றம் ஆதரவுடன் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், மேலப்பாளையம் என்று தொடரும் எமது கோரிக்கை போராட்டம் இறைவனின் மாபெரும் கிருபையால் மேலப்பாளையத்தில் முன் எப்போழுதும் இல்லாத அளவிற்கு மக்களின் ஆதரவு சிறப்பாக இருந்தது. நாம் பொதுக்கூட்டம் என்றுதான் அறிவித்தோம் ஆனால் மக்களும் இறைவனும் அதை மாநாடக மாற்றினான் எல்லா புகழும் இறைவனுக்கே..
இந்த நிகழ்வில் எம்மோடு இனைந்து களமாட முடியாவிட்டாலும் புலத்தில் இருந்து எமக்கு ஆதரவாக எமக்கு ஆலோசனைகளை அளித்து வரும் எமது அன்பு சகோதரர் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் அரசியல் நெறியாளர் வேங்கை இப்ராஹீம்….
இக் கூட்ட நிகழ்விற்கு ஆரம்பம் முதலே அதரவு அளித்து வரும் மனித நேயமக்கள் கட்சியின் பொதுச்செயளாலர் சகோ. தமிமுன் அன்சாரி. பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி. விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் அறுமை அண்ணன் திருமாவளவன். தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சட்டமன்ற உறுப்பினர் அறுமை தோழர். தனியரசு. தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகத்தின் தலைவர் அறுமை சகோதரர் ஜே.எஸ்.ரிபாயி,நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் அறுமை அண்ணன் செந்தமிழன் சீமான். இந்திய தவ்ஹீத் ஜாமாத் தலைவர் அறுமை அண்ணன் எஸ்.எம்.பாக்கர்.பொதுச்செயலாளார் அறுமை சகோ.செங்கிஸ்கான்,சிறுபான்மை உதவி அறக்கட்டளை சகோதரர்கள். சம்சுதீன்,புகாரி, மே17 இயக்கதோழர் திருமுருகன். மக்கள் உரிமைக்கழகம் தோழர் வழக்கறிஞர் புகழேந்தி. தடா.ரஹீம், புரட்சியளர் பழனிபாபாவின் வழக்கறிஞர் வேங்கை சந்திரசேகரன். பேரா.தீரன்,பேரா.ஜவாஹீருள்ளாஹ்.தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம். சோசியல் டெமாக்கரடிக் பார்ட்டி ஆப் இந்தியா நிர்வாகிகள்.பாப்புலர் பார்ட்டி ஆப் இந்தியா நிர்வாகிகள், இன்னும் இன்னும் ஏராளமான நல் உள்ளங்களுக்கும்.
மேலப்பாளையத்தில் எமக்கு உதவிகரமாக இனைந்து களமாடிய சிறுபான்மை உதவி அறக்கட்டளை தோழர்கள், மனித நேயமக்கள் கட்சியின் மாவட்ட செயலர்.அறுமை சகோ.ரசுல்மைதீன். அவரின் குழுவினர். நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொருப்பாளர் வழக்கறிஞர் செந்தில். அறுமை சகோ.நெல்லை சிவா, பெரியார் திராவிடர்கழகதோழர் அகரன். இன்னும் இன்னும் ஏராளமான நல் உள்ளங்களுக்கும்….
இந் நிகழ்வுக்கு எமக்கு பொருளாதர உதவிகள் செய்த சகோதரர்களுக்கும்…

இனையத்தின் வாயிலாக களமாடிய எமதறுமை சகோதரர்கள் சர்புதீன், பாலகுமார்,தமிழ்பிரியன் செந்தில், பாசில்,முத்துப்பேட்டை முகைதீன்,ஜாபர்சாதிக்,மருதநாயகம் கனேசன்,பாலகார்த்தி பீர் மரைக்காயர், சாந்திமாதவன்,தமிமுல் அன்சாரி, இன்னும் இன்னும் பல தோழர்களுக்கும்…
எம்மோடு இனைந்து களமாடிய இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் ஒருங்கினைப்பாளர்களுக்கும்…
எமது நன்றியும் நேசிப்பும்…
 ஆயிரம் தடைகள் வந்தாலும் தொடர்ந்து களமாடுவோம்…
ஆயிரம் முறை வீழ்வோம்
ஆயினும் ஒர் நாள் வெல்வோம்….
அனைத்து சதிகளையும் முறியடிப்போம்
இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளையும்
மீட்டேடுப்போம்…
இது தனி நபர்கள் சார்ந்த பிரச்சனை அல்ல
ஒரு சமுகத்தின் மறுக்கப்பட்ட உரிமை

சே.ஜெ.உமர்கயான்.
தலைமை ஒருங்கினைப்பாளர்
இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்
தமிழ்நாடு


No comments:

Post a Comment