இட்ட சாபம் முட்டுகிறது
கனிமொழியின் பிணை மனுவை சி.பி.ஜ நீதிமன்றம் மீண்டும் நிரகரித்துள்ளது. இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 437ன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவில் தான் பெண் என்பதாலும் மாநிலங்களவை உறுப்பினர் என்பதலும் பிணை வழங்கவேண்டும் என்று கோரியிருந்தார் அந்தபிணை மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. கலைஞர் மிகவும் உடைந்துபோனார் ஆனாலும் காங்கிரசுடன் கூட்டனி நீடிக்கும் என்று அறிவித்தார். கலைஞர் நிலைமை வடிவேல் படத்தில் ”எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் இவன் ரெம்ப நல்லவன்னு சொல்லராங்க” என்ற நிலையில் போய் கொண்டு இருக்கிறது. சரி விசயத்துக்கு வருவோம்.
கனிமொழிக்கு சட்டப்படி பிணை வழங்கவேண்டும் அது அவருக்கு இந்திய அரசியல் சட்டம்? (வெங்காயம்) இன்னும் இருக்கும் சட்டங்கள் எல்லாம் வழங்கியுள்ள உரிமைகள் அது அவருக்கும் பொருந்தும் அவரது பிணை மனு தள்ளுபடியால் வருந்திக்கொண்டு இருக்கும் கனிமொழியின் தந்தையோடு நாமும் சேர்ந்து வருந்துவோம்.
கலைஞரின் செல்ல மகள் இவர் பிறந்த ராசிதான் அவர் ஆட்சி கட்டிலில் ஏற காரணமாக இருந்தது என்ற பகுத்தறிவுக்கே சவால் விடும் அளவிற்கு பாசமாக வளர்ந்த கனிமொழி ஊழல் வழக்கில் இந்திய வல்லாதிக்கத்தின் மையமாம் டெல்லியில் திகார் சிறையில் இருந்து வருகிறார்.
கனிமொழி சிறையிலிருப்பது பற்றி குறிப்பிடும் போது நேற்று பூத்த ரோசாவான என் மகள் உடம்பில் வெயிலால் கொப்பளங்கள் வந்து வாடுகிறாள் என்று வருந்துகிறார் நாமும் ஒரு தந்தையாக இருந்து வருந்துவோம்.
(கொத்து குண்டுகளாலும், ரசாயன குண்டுகளாலும் உடம்பு முழுவதும் கொப்பளங்கள் ஏற்பட்டு துடிதுடிக்க செத்த எம் ஈழ மக்கள் பற்றி உங்களுக்கு நினைவு வந்தால் நான் பொருப்பல்ல!)
ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது?
10 ஆண்டுகளாக மக்களுக்கு வாரி வாரி வழங்கினோமே (தன் மக்களுக்கும்தான்) (யாரப்பா அது! உங்கப்பன் வூட்டு பணமா? னு கேட்கிறது) அவர் அறிவிக்காத இலவசங்களே இல்லை!
ஒரு திருமணம் செய்தால் இன்னொரு திருமணம் என்ற இலவசம் தவிர!!
ஏன் மக்கள் என்னை முழுமையாக தூக்கி எரிந்தார்கள் என்று காரணம் தேடும் இளைஞரே...
தமிழினத்தின் தானை தலைவன் என்று தனக்கு தானே பட்டம் சூட்டிக்கொண்டு மக்கள் வரிப்பணத்தில் செம்மொழி மாநாடு என்ற கனிமொழி மாநாடு நடத்தி, காசு கொடுத்து பதவி கொடுத்து தனது அல்லக்கை கவிஞனை எல்லாம் கூட்டி வந்து கவிதை என்ற பெயரில் உங்களுக்கு முதுகு சொரிந்த கூத்தை அரங்கேற்றி தமிழனுக்கும் தமிழுக்கும் எதுவும் செய்யாததால் தான் இப்படி நடந்திருக்குமோ?
டெல்லியில் காங்கிரசு வல்லாதிக்கத்தை எதிர்த்து தமிழ் மக்களுக்காய் நீங்கள் வீர சமர் புரிந்து கொண்டிருப்பதாக நாங்களெல்லாம் என்னியிருக்க நீங்களோ டெல்லிகாரனிடம் மந்திரிபதவிகளுக்காய் மடிப்பிச்சை ஏந்தியிருக்க பின்பு கோபமாய் நீங்கள் திரும்பியதை பார்த்து நாங்கள் புல்லரித்து போய் பார்த்து கொண்டிருக்க பிறகு தான் தெரிந்தது பதவி பேரம் படியாததால் நீங்கள் திரும்பினீர்கள் என்று உங்கள் கோபத்தை பதவிக்காக காட்டியதில் சிறு அளவேனும் இனத்திற்காய் காட்டியிருந்தால் காங்கிரசுகாரன் இன்று உங்களை இப்படி பழிவாங்கியிருப்பானா?
அதனால் தான் இப்படிஎல்லாம் நடக்கிறதோ??
2009ல் ஈழதேசம் முழுவதும் ரத்தவாடையும் எங்கள் உறவுகள் கழுகுக்கும் நாய்களுக்கும் இரையாகி கொண்டு இருக்கும் போது
சிங்கள வெறியர்களோடு உங்கள் இத்தாலி காங்கிரசின் பழிதீர்க்கும் வெறியால் எங்கள் ஈழ உறவுகளை அழித்துக்கொண்டு இருக்கும் போது ஈழத்தில் போரை நிறுத்தக்கோரி தமிழகமே எழுச்சி கொண்டபோது வழக்கம் போல் உங்கள் தந்திர வேலைகளை காட்டினீர்கள். முதலில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா என்றீர்கள்! பின்பு மத்திய அரசை புரிந்து கொண்டேன் என்றீர்கள்! உலக கமொடியாக கின்னஸில் இடம்பிடித்த காலை உணவுக்கு பிறகு மதிய உணவு நேரம் வரை மட்டுமே நீடித்த உண்ணாவிரத நாடகம்!. சட்டமன்ற வெற்றுத்தீர்மாணங்கள்! பின்பு புற முதுகு காட்டி மருத்துவமனையில் படுத்துகொண்டும், உங்கள் உண்ணாவிரத நாடகத்தால் போர் நிறுத்தப்பட்டு விட்டது என்ற அறிவிப்பை நம்பி பதுங்கு குழியில் இருந்து வெளியில் வந்த மிச்சபேரும் மடிந்தார்களே! நீங்களும், மிசை இல்லாத தமிழன் சிதம்பரமும் போட்ட நாடகத்தில் எங்கள் உறவுகள் படுகொலை செய்யப்பட்டார்களே? அந்த காரணமாக இருக்குமோ!
எங்கள் செந்தமிழ் நாட்டில் இவனைபோல் அறிவிற்சிறந்த ஒரு மாவீரன் இனி எப்போழுது கிடைப்பானோ என்று எங்களை ஏங்க வைக்கும் முத்துக்குமார் துடிதுடித்து உயிரிழக்கும் போது கூட உங்களையும், ஈழ மக்களுக்காக போராடத இனத் துரோகிகளையும் தோழுரித்துக் காட்டிவிட்டு செத்துப்போனானே அதனால் இருக்குமோ?
10ஆண்டுகளாய் ஆட்சியில் இருந்தும் 20வருடங்களாய் தூக்குமர நிழலில் இருந்துவரும் மூன்று தமிழ் பிள்ளைகளின் தூக்கு கயிற்றை அறுத்து எரிய எதுவும் செய்யாமல், தன் மகனின் அல்லகைகள் என்ற ஒரேதகுதிகாக தண்டனை குறைப்பு செய்து அவர்களுக்கு மட்டும் சலுகை காட்டி விடுதலை செய்த நீங்கள், 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை முடித்த இஸ்லாமிய சிறைவாசிகள் கால கிரகத்தில் அடைக்கப்பட்டு அவர்கள் குடும்பங்கள் நடுத்தெருவில் நின்று ஆதரவு இல்லாமல் அழைகிறதே? சட்டம் அனைவருக்கும் சமம் என்றால் அதில் இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு மட்டும் பாரபட்சம் காட்டிய உங்கள் துரோகத்தினால் இப்படி நடந்திருக்குமோ..?
உங்கள் துரோகத்தால் வீழ்ந்த ஈழத்தில் உங்கள் மகள் வயதுடைய எங்கள் இசைபிரியாக்கள் மண்னிழந்து மானமிழந்து துடிதுடித்து சாகும்போது உங்கள் துரோகத்திற்கு எதிராக அறம் பாடியிருந்தாலும் பாடியிருப்பார்கள்...
எங்கள் தேசத்து வீர புலவன் என் பாட்டன் பெரிஞ்சித்திரனார் அப்படித்தான் ஒருநாள் இந்திய அமைதி காக்கும் படை என்ற பெயரில் எங்கள் ஈழ தெருக்களில் சமாதனம் பேசவந்தவன் எங்கள் தமிழர்களின் இரத்தம் குடித்ததையும் எங்கள் வீர தமிழச்சிகளின் மானம் அறுத்ததையும் கண்டு மனம் வெதும்பி அறம்பாடினான். அதன்படி 1991 மே 21 சம்பவம் ஈழ மக்களுக்கு எதிரான இந்திய கொடுமைக்கு ரத்த சாட்சியாய் ஆனது..
இனி...
மடிந்த எங்கள் ஈழமக்கள் 1.50.000.பேர்கள் கடைசி நேர மரணப் போராட்டத்தில் பாடிய அறத்தால் இன்னும்
எத்தனை துரோகங்கள் வீழுமோ..!
உமர்கயான் சே.
இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர் இயக்கம்.
No comments:
Post a Comment