தனிஓசை
வசந்தத்தின்
வாசல்களை தொடமுடியாத
சிறகொடிந்த பறவை இது
இது ஏனோ
எதற்க்கோ
கூவிதிரிகிறது..
அதன் மனதிற்க்குள்
அழும் ஓசை
ஒற்றைபுல்லாங்குழலாகிறது.....
அந்த அடர்ந்த வனத்திற்க்குள்ளே
சூரியனின் ஒளிச்சேர்க்கை
இன்னும் ஏனோ
தொடமுடியாத தூரத்தில்
இளவேனிற்காலத்தின்
இருண்ட இரவில்
நம்பிக்கை மட்டுமே
அதற்க்கு வெளிச்சமாய்..
அது பாடும் பாடல் எல்லாம்
அன்பே
உன்பெயர்தானே....!
உமர்கயான்.சே
No comments:
Post a Comment