ஏன் இன்னும்மெளனம்
உலகம் முழுவதும் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு ஏதிராக
மனிதநேயம் கொண்ட ஒவ்வெருவரும் தங்களின் குரலை
ஒலித்துக்கொண்டுஇருக்கும் வேலையில் எம் இஸ்லாமிய
சகோதரர்களே என்ன நேர்ந்தது உங்களுக்கு.....
முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்து ஒருலட்சத்து ஜம்பதனாயிம்
மக்கள்கொல்லப்பட்டு,இன்னும் இலங்கை சிறையில் தமிழ் இளையவர்கள்,பென்கள் தினம் சித்தரவதைகள் அடைந்து செத்துக்கொண்டு இருப்பதை நீங்கள் அறிவீர்களா..?
போர் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்னும் எம் மக்கள்
முள்வேலி முகாம்களில் ஆடு மாடுகளைப்போல் அடைத்து வைத்திருப்பதை நீங்கள் அறிவீர்களா...?
ஈழத்தில் இன அழிப்புத்தான் நடந்தது என்று தினம் தினம்
ஊடகங்கள் மூலம் செய்திகள் வருகிறது
மனிதநேயம் கொண்ட ஒவ்வெறுவரும் சிங்களநாய்களின்
படுகொலைகலை கண்டித்து வரும் வேலையில் நீங்கள்மட்டும் ஏன் மவுனிக்கிறீர்கள்...?
திருநங்கைகள் கூட வீதிக்கு வந்து போரை நிறுத்தகூறி போராடினார்கள்....?
எம் தமிழினத்தின் மாவீரன் முத்துக்குமார் உட்பட 18 மனிதபிமானிகள் ”சிங்கள நாய்களே போரை நிறுத்துங்கள்”
”இந்திய அரசே சிங்களபோர்வெறியர்களுக்கு துனைபோகாதே”
என்று தங்கள் தேக்கு மர தேகத்தில் தீவைத்து தங்களை தாங்களே மாய்த்து கொண்ட அந்தமாவீரர்கலை பற்றியாவது உங்களுக்குத்தெரியுமா..?
உலகம் முழுவதும் ஊடகங்கள் இலங்கையில் நடந்த இன அழிப்பு
கொடுரத்தை பற்றி எழுதியும் பேசியும் வரும் வேலையில் தமிழகத்தில் இருக்கும் சில இஸ்லாமிய இயக்கங்கள்
ஈழத்தில் என்றோநடந்த சம்பவங்கலைப்பற்றி பேசியும் எழுதியும்
நடந்த இனப்படுகொலையை நியாப்படுத்துகிறார்கள் ”உனர்வுடன்”
எம் இன மக்களை தமிழர்கள் என்று பார்க்கவேண்டாம் மனிதர்கள் என்றாவது பார்க்களாமே...
ஒரு மனித அழிப்பு அவலம் பக்கத்தில் 18மைல் அருகில் நடக்கிறது அதை எதிர்க்கதுப்பில்லாதவர்கள் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்றும் மனிதநேயத்தை பற்றியும் பேச அருகதை அற்றவர்கள்....!
உன்மைகளை மறைத்து இஸ்லாமிய மக்களிடம் தவறான தகவல்கலை கூறி உனர்வுமிக்க இஸ்லாமிய இளையவர்களை
மூளைச்சலைவை சொய்துவரும் இம் மரண வியபாரிகளை இஸ்லமிய மக்கள் புரிந்த்து கொள்ளவேண்டும்....
என் இனிய இஸ்லாமியசகோதரர்களே....
மதுரைகுழுங்கட்டும்,சென்னை நடுங்கட்டும் என்று தேர்தல் வந்தால்மட்டும் வீதிக்கு வரும் இவர்கள் நாஜீ இட்லர்கூடசெய்யத
இனப்படுகொலை செய்த இலங்கை அரசு பயங்கரவாதத்தை எதிர்த்து இவர்கள் வீதிக்கு வந்ததுண்டா..?
இவர்கள் ராஜபட்சேவுக்கு பங்காளியா? இல்லை இனப்படுகொலையை ஆதரிக்கிறீர்களா...?
பாலஸ்தீன்,ஈராக்,ஆப்கான்,இன்னும் அமெரிக்கஏகாதிபத்திய
ஆக்கிரமிப்பை ஏதிர்த்து போராடும் நீங்கள் அங்கு கொல்லப்படுவது மூஸ்லிம்கள் என்பதால்தான..?
ஈழத்தில் கொல்லப்பட்டது இந்துக்கள் என்பதால்தான்
நீங்கள் போராடவில்லையா?
தமிழகமீனவர்கள் 500க்கும் மேற்ப்பட்டோர் சிங்கள இனவெறி
நாய்களால் கொல்லப்பட்டார்களே
அந்தகொல்லப்பட்டதமிழகமீனவர்களுக்காகதான் நீங்கள்
போராடியதுண்டா..?
அன்புஇஸ்லாமிய உறவுகளே...
உலகம்முழுவதும் இஸ்லாமியமக்கள்தாக்கப்பட்டபோதும்,
ஏன் இந்தியதுனைகண்டத்தில் எங்கு இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டாலும் குரல்கொடுக்கும்நீங்கள் தமிழகமீணவர்கள்
எம்தேசகடல்வெளியில் சிங்களவெறிநாய்களின் அகோர பசிக்கு
இரையாவதை எதிர்த்து நீங்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை
அவர்கள் இந்துக்கள்,கிருத்துவ மீணவர்கள் என்பதாலா..?
இதுவே கொல்லப்பட்டது முஸ்லீம் மீணவன் என்றால்...?
சரி ஈழத்தில் எம் இன உறவுகள் ஒட்டுமொத்தமாக
இன அழிப்பு,ஆக்கிரமிப்பு போரில் நாங்கள் பலி கொடுத்துவிட்டோம் எங்கள் வீட்டில்தான் இழவு விழுந்தது
நாங்களேஅழுதுகொல்கிறோம் நீங்கள் எங்களுக்காக அழவேண்டாம்..
இந்ததேசத்தில் அனைத்துமக்களுக்குமான வாழ்வாதார பிரச்சனைகளுக்காக எம்தேசதெருக்களில் பெட்ரோல்விலைஉயர்வு,விலைவாசிஉயர்வு, எம் மன்னையும்,எம்தேசவிவசாயிகளையும் பாதிக்கும்வெளிநாட்டு
பூச்சிக்கொல்லிகம்பெனிகள் எதிர்ப்பு, பயங்கரவாத ஆள்தூக்கி
சட்டங்கள் எதிர்ப்பு இன்னும் இன்னும் ஏராளமான மக்கள்
பிரச்சனைகளுக்காக தெருக்களில் இறங்கி போராடி,துப்பாக்கி
குண்டுகளும்,தடியடிகளும்,சிறைவாசங்களும் ஏற்றஎம் மக்களோடும்,எம் உரிமைக்காகபோராடும் போராளிகளோடும்
என்றாவது வீதிகளில் இறங்கிபோராடியதுண்டா...?
இல்லை இஸ்லாமிய இயக்கங்கள்,கட்சிகள்தான் இப்படியான
பொதுபிரச்சனைகளை முன்னிறுத்தி என்றேனும்
போராடியதுண்டா...?
யார் யாரோ போராடி, சிறை சென்று,செத்து அந்த போராட்டத்தின்
விளைவாககிடைக்கும் பலன்களைமட்டும் நீங்கள் அறுவடை செய்து கொள்வீர்கள்...?
இராக்கில்,பாலஸ்தினத்தில்,ஆப்கனில் இஸ்லாமியர்களின்மீதான
அமெரிக்கவின்,இஸ்ரேலின் ஆக்கிரமிப்புபோருக்கு ஏதிராக பீகார்,
சதீஸ்கர்,அந்திராவில் தண்டகாருன்ய காடுகளில் இருக்கும்
பழங்குடிமக்களை நக்சல்பாரி.மவோஸ்ட்புரட்சியாளர்கள்
அனிதிரட்டி அந்த அடர்ந்த வனத்திற்க்குள் பேரணிகளும்
ஆர்ப்பாட்டங்களும் நடத்தியதாவது அன்பு இஸ்லாமியஉறவுகளே,
இஸ்லாமிய இயக்கங்களே உங்களுக்குதெரியுமா..?
அந்த பழங்குடி மக்களுக்கு அமெரிக்கவும்,ஈராக்கும் தெரியாது
ஆனல் ஒரு கொடுமைக்கு எதிராக,படுகொலைகளுக்கு எதிராக
போராடவேண்டும் என்ற பழங்குடி மக்களுக்கு இருந்த மனிதநேயம் மனிதநேய மார்க்கம் பேசும் உங்களுக்கு ஏன் இல்லை?
குஜராத்தில் இஸ்லாமியமக்கள்மீது இந்துவாவாதிகளும் நரமாமிச
நரேந்திரமோடியும்கலவரத்தைதுண்டிவிட்டபோது இஸ்லாமியர்கள்
மீதான இனவெறிதாக்குதலென்றும் குஜராத்தில் நடந்தது ஒரு
இனப்படுகொலைஎன்று நக்சல்பாரிகளும்,தமிழ்தேசிய போராளிகளும்,சனநாயகசக்திகளும்,மனித உரிமைபோராளிகள்,
எழுத்தளர்கள்,பத்திரிக்கையாளர்கள் என அனைவரும் வீதிகளில்
போராடினார்களே அதைத்தான் நீங்கள் அறிவீர்களா..?
இஸ்லாமிய சகோதர்களே....
நாம் எங்கோ அரபுதேசங்களில் இருந்துவந்தவர்கள் அல்லநாம்
நம்வேர்கள் இந்தமண்னில் உள்ளது.
இந்தமண்னின் அனைத்து உரிமைகளையும் நமதாக்குவோம்
அனைத்துவிதமானஒடுக்குமுறைகளுக்கும் எதிராகஅனிதிரள்வோம்
மொழி,இனம்,பாதுகாக்கபோராடுவோம்
ஈழத்தில்நடந்த இனப்படுகொலைகளுக்குஎதிராகபோராடுவோம்
மனிதநேயம்பேசிக்கொண்டு ஈழத்தில்நடந்த இனப்படுகொலையை
கண்டித்து எதுவும்பேசாத எதிர்த்துபோராடாத இனவெறியன்
ராஜபக்சேவைஎதிர்க்காத இஸ்லாமிய இயக்கங்களைபுறக்கணிப்போம்
ஈழமக்களுக்காகதன் உயிர்நீத்த அப்துல்ரவுப்பைநினைவுகூர்வோம்
இஸ்லாமியர்களே..! இயக்கங்களே.!
நீங்கள்மனிதநேயர்கள் என்றால்
ஈழத்தில் படுகொலைசெய்யப்பட்டது அந்தபிஞ்சுகள் நம்குழந்தைஎன்றால்
சர்வதேசசட்டங்கள் அனைத்தையும் மீறி மனிதபேரழிவைஏற்படுத்திய இலங்கையை நீங்கள் எதிர்க்கவில்லை என்றால்
உங்களிடம் மனிதநேயமும் இல்லை
மார்க்கமும் இல்லை
ஏன் நீங்கள் மனிதனே இல்லை
உமர்கயான்.சே
No comments:
Post a Comment