ஜனவரி 28 புரட்சியாளர் அல்ஹாஜ் பழனிபாபா அவர்கள் வீர விதையான 15ம் ஆண்டு நிகழ்வு பழனி ஆயக்குடியில் ந்டைபெற்றது
ஒவ்வொறு ஆண்டும் ஜனவரி 28ஜ ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி நாளாக கடைபிடித்து பழனிபாபா எந்த லட்சியத்திற்காக மாண்டு போனாரோ அந்த லட்சியத்தை முன்னேடுப்போம் என்று அந்த நாளில் அந்த லட்சிய மாவீரனை நினைவுகூர்ந்து உறுதி மொழி எடுக்கும் நிகழ்வும் அங்கு நடக்கும். தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சிறப்பாக நிகழ்வுகளை நடத்திவருகிறது.அக் கட்சியின் தலைவர் கே.எம். சரீப் அவர்கள் கடந்த10ஆண்டுகளாக பழனி ஆயக்குடியில் நிகழ்வுகளை நடத்திவருகிறார்.
பழனிபாபா பற்றிய சிறு நினைவுக்குறிப்பு
அகமது அலி என்பது பழனிபாபாவின் இயற்பெயர்
இஸ்லாமியர்,தாழ்த்தப்பட்டோர். ஒற்றுமையை உருவாக்கி காண்பித்தவர்.
அரசியல் தளத்தில் இஸ்லாமிய மக்களை மிக பெரிய அளவில் அணி திரட்டியவர்.
சட்ட ரீதியான சவால்களை சந்திக்க ஒடுக்கப்பட்ட மக்களை தயார்படுத்தியவர்.
இஸ்லாமிய மக்கள் பிரச்சனைக்காக 100-க்கும் மேற்பட்ட முறை அரசால் கைது செய்யப்பட்டவர்.
இஸ்லாமியர்.ஒடுக்கப்பட்டோர் ஒற்றுமைக்காக தன் உயிரையே தியாகம் செய்தவர். இப்படி பண்முக தன்மை கொண்ட போராளி புரட்சியாளர் பழனிபாபா தமிழகத்தில் இஸ்லாமிய மக்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டும் வேலையை 80ம் ஆண்டு கால கட்டங்களில் மிக வேகமாக முன்னேடுத்தவர்.
இன்றைய இஸ்லாமிய இயக்கங்கள் கூறும் கொள்கைகள் அனைத்தையும் 25 ஆண்டுகளுக்கு முன்பே முழங்கியவர் பழனிபாபா
பழனிபாபாவின் உழைப்பை, இன்றைய இஸ்லாமிய இயக்கங்கள் மட்டும் அறுவடை செய்து கொள்ளவில்லை, அன்றைக்கு எம்.ஜி ஆர்., கருனாநிதி, ராமதாஸ் முதற்கொண்டு அனைவரும் பயன்படுத்திக் கொண்டனர்.தன் சமுக மக்கள் மட்டுமல்ல அனைத்து மக்களுக்காகவும் போராடிய தலைவர். தமிழகம் முழுவதும் ஜமாத்துகளை ஒன்றினைக்க அயராது களமாடிய தலைவர்.
ஒரு சீட்டுக்கும் இரண்டு சீட்டுக்கும் சமுதாயத்தை அடகு வைக்காதீர்கள். எவனிடமும் சீட்டுக்காக பிச்சை எடுக்கதீர்கள் என்று முழங்கியவர்.
தமிழகத்தில் இஸ்லாமிய மக்களின் ஒட்டு மொத்த சதவீகித கணக்கை கூறி இஸ்லாமியர்களுக் தலித் மக்களும் ஒன்றினைந்தால் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றலாம் என்று கூறி1980ல் இஸ்லாமியர்-தலித் விடுதலை முண்னணியை உருவாக்கி எப்படி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றலாம் என்று வாழ்வுரிமை சாசனம் வெளியிட்டு ஒடுக்கப்பட்ட மக்களிடம் விழிப்பை ஏற்படுத்தினார்.
மனித உரிமைகளுக்கான போராட்டம் என்றாலும், ஈழ தமிழ் மக்களின் போராட்டங்கள் என்றாலும்.தமிழ்நாடு விடுதலை என்ற பார்வையிலும் முண்னணியில் இருந்த பண்முக ஆளுமை கொண்டவர்தான் பழனிபாபா.
இனி எந்த அரசியல் கட்சிக்காகவும் பேசக்கூடாது.தலித் இஸ்லாமிய மக்களை ஒருங்கினைத்து மக்கள் ஜனநாயக கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியை ஆரம்பிக்க தயரானபோதுதான் 1997 ஜனவரி28ம் நாள் பொள்ளாசியில் வைத்து படுகொலை செய்யப்பட்டார் பழனிபாபா.
1997ல் இருந்து 5வருடங்கள் அந்த வீர மகன் விதைக்கப்பட்ட ஆயக்குடிக்கு, போகமுடியா அடக்கு முறைகள். கடந்த 10 ஆண்டுகளாக தமிழகமக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.சரீப் அவர்கள் முயற்சியால் பழனி ஆயக்குடியில் ஜனவரி 28ம் தேதி ஒடுக்கப்பட்டோர் ஒற்றுமை நாள்,ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சிநாள் என்று ஒவ்வொறு வருடமும் நிகழ்வுகள் நடத்தி வருகிறார்.
ஒவ்வொருவருடமும் பல்வேறு தலைவர்கள்,மனித உரிமைப்போராளிகள் என்று பல்வேறு தளங்களில் இருப்பவர்கள் ஆயக்குடியில் ஒன்று கூடுவார்கள். கடந்தவருடம் நாம் தமிழர் கட்சி ஒருங்கினைப்பாளர் செந்தமிழன் சீமான் கலந்து கொண்டு பாபாவின் அரசியல் ஆளுமையை,அவரின் தியாகத்தை நினைவு கூர்ந்தார்.
இந்தவருடம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களையும், SDPI மாநில தலைவர் தெஹ்லான் பாக்கவி, முஸ்லீம் லீக் பாராளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல்ரஹ்மான் அவர்களையும்,எழுத்தாளர் ஆளூர்சானவாஸ் அவர்களும் அழைக்கப்பட்ட நிலையில் அப்துல்ரஹ்மான் MP மட்டும் காணவில்லை நிகழ்வில். சரி நானும் நினைத்துகொண்டேன் பாராளுமன்றத்தில் முஸ்லீம் மக்களின் உரிமைகளுக்காக முழங்கபோய் இருப்பார் என்று அப்பரம்தான் சொன்னாங்க அடே வெவரங்கெட்ட வெங்காயம் உமரு சனி கிழமை பாராளுமன்றமே லீவு இப்ப நம்ம எம்.பிக்கள் எல்லாம் மக்களுக்காக உழைத்த களைப்பில் ஓய்வு எடுக்குராங்க, நீ பேப்பரே பார்பதில்லையா? என நன்பன் நாசர் கேட்க அப்புரந்தான் எனக்கு வெவரமே புரிஞ்சது. சரி, அப்துல் ரஹ்மான் தான் மக்கள் சேவ ஆற்ற போய் இருப்பாரு கட்சியில வேற யாருமே இல்லையா?
அய்யா அப்துல் ரஹ்மானை தொடர்பு கொண்டு கேட்ட போது, நான் டெல்லி போகிறேன் நிச்சயம் நிகழ்வுக்கு வந்து விடுவேன் என்று பல முறை கூறிய நிலையில் அய்யா அப்துல்ரஹ்மான் மட்டும் நிகழ்வுக்கு வரும் அறிகுறி துளியும் இல்லை. சிறு சிறு அமைப்புகள் கூட புரட்சியாளர் பழனிபாபா வின் நினைவேந்தல் நிகழ்வுக்கு போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டியும்,தங்கள். தலைவர்களை வரவேற்று பதாகைகள் வைத்த நிலையில் நூற்றாண்டு கட்சியில் இருந்து துண்டு நோட்டீஸ் கூட இல்லை அப்பவாவது நமக்கு தெரிந்து இருக்க வேண்டாமா?
ஒரு நிகழ்வுக்கு அழைத்தால் ஏற்புடையது என்றால், உங்களால் வரமுடிந்தால் தேதி கொடுத்தால் வரவேண்டும் உங்களால் வரமுடியவில்லை என்றால் உங்கள் பிரதிநிதிகளையாவது அனுப்பவேண்டும் அதுதான் அரசியல்நாகரிகம்.
சேரிதமிழர்களின் எழுச்சி நாயகன் தொல்.திருமாவளவன் அவர்களிடம் இருக்கும் அடிப்படை பண்பு கூட இவர்களிடம் இல்லை என்னும்போது என்ன சொல்வது.
ஜனவரி28 நிகழ்வுக்கு முன்பே மலேசியாவில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வுக்கு தேதி கொடுத்த திருமா எதனாலோ தள்ளிபோனது அந்த நிகழ்வு.ஜனவரி28 க்கு பழனி ஆயக்குடிக்கு வருவதாக ஒப்புக்கொண்டார் திருமா. மலேசியாவில் இருந்து நிகழ்வு ஏற்ப்பட்டாளர்கள் ஜனவரி28ல் நிகழ்ச்சி வைத்திருப்பதாக கூறி அழைக்க வெளிநாட்டு நிகழ்வை கூட தள்ளிவைத்துக்கொள்ளுங்கள் நான் புரட்சியாளர் பழனிபாபாவின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ளவேண்டும் என்று கூறி அந்த தேதியை தள்ளிவைத்து கொள்ளுமாறு கூறி ஜனவரி28ல் கலந்து கொண்டு மறுநாள் மலேசியா சென்றார்.
அருமை சகோதரர் தெஹ்லான்பாக்கவி உடல்நிலை பாதிக்கப்பட்டும் மருத்துவரிடம் சென்றுவிட்டு நிகழ்வில் கலந்து கொண்டார்.இவர்களிடம் இருக்கும் பண்பு நூற்றாண்டு பெருமை பேசும் உங்களிடம் இல்லாமல் போனது ஏனோ?
நீங்கள் புரட்சியாளர் பழனிபாபா என்னும் மாபெரும் மக்கள் தலைவனை நினைவுகூற அவர் லட்சியங்களை,தியாகங்களை பேசாமல் இனி தமிழகத்தில் ஒரு சிறு அசைவையும் செய்யமுடியாது.
இளைஞர்கள், பாபாவின் வெற்றிடத்தை இப்பொழுதுதான் புரிந்து கொண்டார்கள்.இனி உங்கள் பழம் பெருமை இனி எடுபடாது.
பாபாவை பற்றி இனியும் நீங்கள் பேசவில்லை என்றால் தி.மு.காவிடமும்.ஆ.திமுகாவிடமும் ஒரு,இரு சீட்டுகளுக்காக இனி வரும் காலங்களிலும் பல் இளித்து நிற்கவேண்டியதுதான்.
புரட்சியாளர்பழனிபாபா கூறிய படி ஒடுக்கப்பட்ட சமுகங்களின் ஒருங்கிணைவு மூலம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் நாள் தொலைவில் இல்லை.
அப்போழுது வரலாற்றில் இருந்து துடைத்து எறியப்படுவீர்கள்.
வரலாறு என்னை விடுதலை செய்யும்
வரும் காலம் என் சார்பில் வஞ்சமெடுக்கும்
-புரட்சியாளர் பழனிபாபா-
உமர்கயான்.சே